Corporation of Chennai
 

முகப்பு>> துறைகள் >>கல்வி

கல்வித்துறை

10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சென்னைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளின் வளர்ச்சிக்காக தலா ரூ.1 இலட்சம்

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள், 2017-18ம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளின்  வளர்ச்சிக்காக  தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான ஊக்கத் தொகையினை (07.06.2018) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப.,அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் கல்வி அலுவலர் மற்றும் உதவி கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 
civic_services
property_tax
birth_death
building
public_grievance
register_phone
Helpline
nvps