முகப்பு>> மன்றத்துறை

முன்னுரை

மாண்புமிகு மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மன்றத்துறை இயங்குகிறது.  மன்றத்துறையானது 7 நிலைக்குழு கூட்டங்கள், மன்றக் கூட்டங்கள் மாதந்தோறும் நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது.  பல்வேறு மண்டலங்கள், துறைகள் ஆகியவைகளிடமிருந்து மன்றத் தீர்மானங்களாக, நிறைவேற்றவேண்டி அனுப்பப்படும் கோப்புகளை, பொருள் நிரலாக தயாரித்து மன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பித்து தீர்மானங்கள் நிறைவேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நிலைக்குழுக்கள்

1996ஆம் ஆண்டு மீண்டும் மாமன்றம் துவங்கப்பட்ட பின்பு, 6 நிலைக்குழுக்கள் மற்றும் நியமனக்குழுக்களுக்கு, உறுப்பினர்கள் / தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிலைக்குழுக்கள் மற்றும் நியமனக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.  நிலைக்குழு கூட்டங்களில் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துணை ஆணையர்கள், துறைத்தலைவர்கள்  கலந்துகொள்வார்கள்.  நியமனக்குழு கூட்டம், பிரதிமாதம் மாண்புமிகு மேயர் தலைமையில் ஆணையாளர் மற்றும் தேந்தெடுக்கப்பட்ட 2 மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு நடத்தப்படும்.

நிலைக்குழுக்கள் விவரம்

    1.         நிலைக்கழு (கணக்கு)                 -           தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    2.         நிலைக்குழு (கல்வி)                     -           தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    3.         நிலைக்குழு (சுகாதாரம்)                       -           தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    4.         நிலைக்குழு (வரிவிதிப்பு (ம) நிதி)-    தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    5.         நிலைக்குழு (பணிகள்)               -           தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    6.         நிலைக்குழு (நகரமைப்பு)                     -           தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள்
    7.         நியமனக்குழு                                 -           மாண்புமிகு மேயர் (தலைவர்)

    ஆணையாளர் மற்றும் 2 மன்ற  உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்களாக பணியாற்றுவர்.

மன்றக் கூட்டம்

    பெருநகர சென்னை மாநகராட்சியானது (1919-ஆம் ஆண்டு சென்னை மாநகர் முனிசிபல் மாநகராட்சி சட்டம் அட்டவணை-2, பத்தி-3 (1)  எ விதியின் கீழ்) மாண்புமிகு மேயர் அவர்களால் அறிவிக்கப்படும் நாளில் மன்றக் கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெறும்.  ஆணையர் அவர்களின் ஒப்புதல் பெற்று இதற்கான ஏற்பாட்டினை பிரதிமாதம் மன்றத்துறை செய்கிறது.

தீர்மானங்கள்

    மாநகராட்சியில் அனைத்து துறைகளிலிருந்து பெறப்படும் கோப்புகளை ஆணையர் அவர்களால் பரிசீலனை செய்து, பரிந்துரைத்து சம்மந்தப்பட்ட நிலைக்குழுக்கள் மற்றும் நியமனக்குழு  மூலம் பரிந்துரைத்து மன்றத்திற்கு, அத்தகைய பொருள்கள் வைக்கப்பட்டு அதனை பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இத்தீர்மானங்கள் உடனுக்குடன் மன்றத்துறையின் மூலம் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அத்தீர்மானங்களின் அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள், நிர்வாக சம்மந்தப்பட்ட பொருள்கள் தீர்மானங்களாக மன்றம் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

குறைத்தீர்க்கும் மனு

    மாண்புமிகு மேயர் அவர்களால், தினந்தோறும் வேலை நாட்களில் பொது மக்களிடமிருந்து சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றல், குடும்ப அட்டை விநியோகம், கருணை பணிநியமனம் போன்ற இனங்கள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு பெரும்பாலான மனுக்கள் மீது நிர்வாக ரீதியாக, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாநகராட்சி பணிகள் மட்டுமின்றி பிற துறைகளான குடிநீர் வாரியம், மின்வாரியம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தீயணைப்பு துறை போன்ற பிற துறைகள் சம்மந்தமாக, பெறப்பட்ட மனுக்கள் சம்பந்ததப்பட்ட துறைகளுக்கு உரிய தீர்வுசெய்ய  மேல்நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டு வருகிறது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட பணியாணை வழங்கும் அதிகார வரம்பு

    •           வார்டுக்குழுக்கள் ரூ.10/- லட்சம் வரை அனுமதி,
    •           ஆணையர் ரூ.10/- லட்சத்திற்கு மேல் ரூ.50/- லட்சம் வரை அனுமதி,
    •           மாண்புமிகு மேயர் ரூ.50/- லட்சத்திற்கு மேல் ரூ.60/- லட்சம் வரை
    அனுமதி,
    •           நிலைக்குழுக்கள் (வரிவிதிப்பு மற்றும் நிதி நீங்கலாக) ரூ.60/-
    லட்சத்திற்கு மேல் ரூ.75/- லட்சம் வரை அனுமதி,
    •           நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) ரூ.75/-லட்சத்திற்கு மேல் ரூ.1.00
    கோடி வரை அனுமதி
    •           மன்றம் ரூ.1.00 கோடிக்கு மேல் ரூ.10/- கோடி வரை அனுமதி
    •           அரசு - ரூ.10/- கோடிக்கு மேல்

    மேற்கண்ட வகையில் டெண்டர் வழங்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் செய்யப்படுகிறது.

சிறப்பு அதிகாரி:

                சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் குறித்து சில வழக்குகள் (எண்.WP.33984/2016)தொடர்ந்து, நிலுவையில் அவ்வழக்குகள் உள்ளதால், தமிழக அரசு, அரசாணை எண்.G.O.Ms.147, நாள்.24.10.2016ன்படி தற்போது, மேற்கண்ட அனைத்து பணிகளும் சிறப்பு அதிகாரி (மன்றம்) மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

                மேற்கண்ட வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்துறை செயல்பட்டு வருகிறது.