முகப்பு>>துறைகள்

நிலம் மற்றும் உடைமைத்துறை

அமைப்பு

           பணித்துறையின் அங்கமாக இருந்த நிலப்பிரிவு மற்றும் நிள அளவைப்பிரிவு ஆகியவை பணித்துறையிலிருந்து பிரிக்கப்பட்டும், வருவாய்த் துறையிலிருந்து பிரிக்கப்பட்ட பல்வகைப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 1.7.89 நாளிட்ட மன்றத் தீர்மான எண். 563/89 வாயிலாக பெருநகர  சென்னை மாநகராட்சி யின் நிலம் மற்றும் உடைமைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்க நிலம் மற்றும் உடமைத்துறை உருவாக்கப்பட்டது.

செயல்பாடு

  •           பெருநகர  சென்னை மாநகராட்சி யின் நிலங்கள் சம்பந்தமான எல்லா அடிப்படை ஆவணங்களையும் பாதுகாத்தல்
  •          சென்னை நகர முனிசிபல் கார்பரேசன் சட்டம் 1919 ன் 74வது பிரிவின்படி தன்வசம் எடுத்துக் கொள்ளும் சாலைகள் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட மனைகளில் குறிப்பிட்ட காரியத்திற்காக ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடங்களின் அன்பளிப்பு ஒப்பந்தம்.
  • மனை வரைபட மேம்பாடு * வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதியில் 19 (அ) 3,4 மற்றும் 5 பிரிவின் கீழ்
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - த.நா.வீ.வ.வா. சட்டம் 1961 ன் 61 (1) மற்றும் (2) பிரிவின் கீழ்
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் - த.நா.கு.மா.வா. வட்டம் 1971
  •          மேற்படி நிலம் தகுந்த முறையில் மேலும் பகுக்கப்பட்டபின் பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு மாற்றம் செய்து வருவாய் ஆவணங்களில் பதிவு மெற்கொள்ள வேண்டிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  •           மாநகராட்சியின் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு வரி வசூலித்தல் மற்றும் குத்தகை / உரிமத்திற்காக ஒதுக்கப்பட்ட எல்லா நிலங்களையும் மறு ஆய்வு செய்தல்
  •          மாநகராட்சியின் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை தனிப்பட்டவர்களுக்கு ஏலம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் ஒதுக்கப்பட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது.
  •          மாநகராட்சி தேவைக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894 ன்படி, நிலம் கையகப்படுத்தும் அலுவலருக்கு விரிவான திட்டம் சமர்ப்பித்தல் அல்லது தனியாரிடம் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்துதல்
  •          அன்பளிப்பாளர்களிடமிருந்து எவ்வகை அசையா சொத்துக்களையும் பெருநகர  சென்னை மாநகராட்சி யின் பேரில் “அன்பளிப்பு ஒப்பாவணம்” மூலமாக சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டம் 1919ன் 74வது பிரிவின்படி அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளுதல்.
  •          பொது நோக்கத்திற்காக அரசு நிலங்களை பெருநகர  சென்னை மாநகராட்சி பெயருக்கு உடைமை மாற்றுவதற்கு வருவாய் நிலை ஆணைகீழ் 24வது பிரிவின்படி திட்டங்கள் சமர்ப்பித்தல்
  •           பொது நோக்கத்திற்காக பெருநகர  சென்னை மாநகராட்சி நிலங்களை வேறு அரசு துறைகளுக்கு சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டம் 1919ன் 75வது பிரிவின்படி விற்பனை செய்தல்
  •         பொது மக்கள் உபயோகத்திற்காக நகர நிலப்படம் ரூ.50 க்கும் வார்டு நிலப்படம் ரூ.25 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதல்

            பெருநகர  சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், பாலங்கள், சிறு பாலங்கள் கட்டுவதற்கும் சாலைகள், பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கும், மாநகராட்சி அல்லது அரசுக்கு சொந்தமான நிலங்கள் இல்லாத பட்சத்தில், தனியார் நிலங்களைப் பெற, நிலங்களை கையகப்படுத்தும் அலுவலர் மூலமாக, தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1984  அல்லது நிலத்திற்கு சொந்தமான தனியாரிடம் பேச்சு வார்த்தை மூலமாக தேவையான நிலங்களை கையகப்படுத்துதல். இது மாதிரியான நடப்புகளில் சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டம் 1919ன் 76வது பிரிவின்படி மாநகராட்சி மன்ற தீர்மானம் பெற்ற பின்பு அரசின் குறிப்பிடப்பட்ட படிவங்களில் வரைபடங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர்களுக்கு இத்துறை மூலமாக அனுப்பப்படும். நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்படும் செலவுத்தொகை கோரிக்கை விடுத்த மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறையைச் சாரும். இந்த மாதிரியான கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், மாநகராட்சியின் தனியார் நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் எந்த குறிகோளுக்காக கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்நிலங்கள் வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமெனில் அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.

அரசு நிலங்கள் உடைமை மாற்றம்

            பெருநகர  சென்னை மாநகராட்சி மேம்பாட்டு செயல்பாட்டிற்கு பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலங்கள், சிறு பாலங்கள், சாலைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க அரசுக்கு சொந்தமான நிலங்களை பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு உடைமை மாற்றம் செய்ய கோரிக்கை அளிக்கப்பட வேண்டும்.

 

            அரசு நிலம் உடைமை மாற்றம் செய்ய வருவாய் நிலை ஆணை 24ன் பிரிவின்படி மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் அனுமதிக்கப்பட்டபின், இத்திட்டத்தை குறிப்பிட்ட படிவங்களில் வரைபடங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியாளருக்கு இத்துறை மூலமாக அனுப்பப்பட வேண்டும். அரசிடமிருந்து நிலம் பெருநகர  சென்னை மாநகராட்சி பெயருக்கு உடைமை மாற்றம் செய்யப்பட்ட பின் இந்நிலம் “மாநகராட்சி பொது நிலம்”  என வகை படுத்தப்படும். இந்த நிலங்கள் எந்த குறிக்கோளுக்காக உடைமை மாற்றம் செய்யப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  அரசிடமிருந்து பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு உடைமை மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் உபயோகப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு ஒரு அரசு துறைக்கு தேவைப்படின் உடைமை மாற்றம் செய்யப்பட்ட நிலத்தை பெருநகர  சென்னை மாநகராட்சி மன்ற தீர்மான அனுமதி பெற்று வேறு அரசு துறைகளுக்கு இறுதி உடைமை மாற்றம் ஏற்படும் வகையில் பெருநகர  சென்னை மாநகராட்சி மன்றத்தின் தீர்மான அனுமதியுடன் சென்னை மாவட்ட ஆட்சியாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் / சாலைகள்

            வளர்ச்சிக் கட்டுப்பாடு விதியின் 19 (1) (3) (4) மற்றும் (6) வது பிரிவின்படி திறந்தவெளி இடங்கள், சாலைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத்திடல் போன்றவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி பொது நோக்கத்தின்படியும், இயக்குநர் நகர்புறத் திட்டத்தின்படியும் உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்படும். இந்த நிலங்கள் அன்பளிப்பு ஒப்பாவணங்களாக பதிவு செய்யப்பட்டு அளிப்பதற்கு முன்பாகவே உள்ளாட்சி அமைப்புக்கு தானாகவே உடைமையாகிவிடும். தற்பொழுது இவ்வகையான நிலங்கள் வீடுகட்டும் வணிகர்/த.நா.வீ.வா/த.நா.கு.மா.வா ஆகிய துறைகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அன்பளிப்பு ஒப்பாவணம் மூலமாக, சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டத்தின் 74வது பிரிவின்படி மன்றத் தீர்மானத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும்.

            இம்மாதிரியான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு அற்றதாக இருக்கப்பட வேண்டும். இந்நிலங்கள் எந்த பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிலங்களின் பயன்பாடு மாற்றப்பட முடிவு செய்யும் பட்சத்தில், மன்ற தீர்மானம் பெற்ற பின்பு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக அரசின் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் எந்த ஒரு அரசு துறை தனியார்/தனிப்பட்டவர்கள் ஆகியோருக்கு விற்கவோ வாடகைக்கு அமர்த்தவோ கூடாது. ஆனால் சம்பந்தப்பட்ட குடியிருப்போர் சங்கம் அல்லது அடுக்குமாடி வீட்டு குடியிருப்போர் சங்கங்கள் பராமரிக்க வேண்டி கோரிக்கை விடுத்தால் மன்ற தீர்மானம் பெற்ற பின்பு குறிப்பிட்ட காலம் வரை பராமரிக்க அனுமதி வழங்கப்படும்.

            இந்த நிலங்களில் (பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1959ன் தமிழ்நாடு பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி இடங்கள் தலைப்பில் பிரிவு 8ன் படி அரசின் முன் அனுமதி பெறாமல் நிரந்தர கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மாதிரியான எல்லா டீளுசு நிலங்களின் விவரங்கள் (பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1959ன் தமிழ்நாடு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி இடங்கள் தலைப்பில் பிரிவு 5(3) (ய) மற்றும்  (ª) ன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் இந்த வகையான நிலங்கள் “மாநகராட்சி தனியார் நிலங்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்பளிப்பு நிலங்கள்

            பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு, மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றிற்காக பொது நோக்கத்திற்காக நன்கொடை அளிப்பவரின் அசையா சொத்துக்களை “அன்பளிப்பு ஒப்பாவணம் பதிவு மூலமாக” சென்னை நகர முனிசிபல் சட்டம் 74வது பிரிவின்படி மாநகராட்சி மன்ற தீர்மானம் அனுமதி பெற்று பெருநகர  சென்னை மாநகராட்சி ஏற்றுக் கொள்ளப்படும். இந்த அன்பளிப்பு நிலங்கள் எந்த பயன்பாட்டுக்கு நன்கொடை அளிக்கப்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வகையான நிலங்கள் “ மாநகராட்சி தனியார் நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன”.

மாநகராட்சி நிலங்களை அரசு துறைகள் / அரசு சார்ந்த துறைகள் / நகராட்சிகள் வாரியங்கள் ஆகியவற்றிற்கு மாற்றம் செய்தல்

            பெருநகர  சென்னை மாநகராட்சி நிலங்களை தனியார் / அமைப்புகள் ஆகியவற்றிற்கு அளிப்பதற்கு அரசு, 14.4.1976 நாளிட்ட அ.ஆ. (சுவ) எண். 730, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆணையில் தடை செய்யப்பட்டுள்ளது.

            பெருநகர  சென்னை மாநகராட்சி யால் பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், அந்த நோக்கத்திற்காக பயன்படாமல் தேவையற்றதாக இருக்கும் பட்சத்தில், இதே நிலங்கள் வேறு அரசு துறைகள் / அரசு சார்ந்த துறைகள் / நகராட்சிகள் / வாரியங்கள் சட்டம் 75வது பிரிவின்படி மன்ற தீர்மான அனுமதி பெற்றபின்பு, 17.2.1997 நாளிட்ட அ.ஆ. (சுவ) எண். 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி மாவட்ட ஆட்சியாளர் நிலத்திற்கான தொகையை அனுமதியிட்டபின்பு 25.2.2000 நாளிட்ட அ.ஆ. (சுவ) எண். 25, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி விற்பனை செய்யப்பட வேண்டும்.

            இருப்பினும், பெருநகர  சென்னை மாநகராட்சி நிலங்களில் ஏற்கனவே குடிசை வாசிகளால் குடியாக்கம் செய்யப்பட்டு கேள்விக்குறியாக இருக்கும் இந்நிலங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தங்களது மேம்பாட்டு திட்டத்திற்காக, அ.ஆ. (சுவ) எண். 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணைபடி எடுத்துக் கொள்ள முன்வரும் பட்சத்தில், ஒரு மனைக்கு ரூ.10,000/- வீதம் அந்த வாரியத்திற்கு விற்பனை செய்யலாம்.

குத்தகை

            பெருநகர  சென்னை மாநகராட்சி யின் அசையா சொத்துக்களை 1976 ஆண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டம் 1919ன் 75வது பிரிவின்படி இதர அரசு துறைகள் / அரசு சார்ந்த துறைகள் / நகராட்சி / வாரியம் / தனியார் சங்கங்கள் / தனியார்களுக்கு குத்தகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.

            இதன்படி ஏறக்குறைய 532 நிலங்களை வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. எல்லா குத்தகைகளின் குத்தகை காலம் வெவ்வேறு நிலைகளில் முடிந்துள்ளபடியால், நிலங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில நிலங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களை திரும்பப் பெறுவதற்கு பல்வேறு நீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குத்தகை காலங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய குத்தகை வாடகைக்கான நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குத்தகை காலம் முடிந்து, நிலம் குத்தகை விடப்பட்டவரோ, அவரால் சட்டப்படி நியமிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கும் பட்சத்தில் இழப்பீடு கட்டணமாக நிலம் திரும்பப் பெறும் வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

            நிலங்களை எந்த ஒரு தனியார்/ சங்கங்களுக்கு குத்தகை விடுவதற்கு, 14.4.1976 நாளிட்ட  அ.ஆ.எண்.730, ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் அரசு ஆணையில் தடை செய்யப்பட்டுள்ளது.

            இருப்பினும், 25.2.2000 நாளிட்ட அ.ஆ. (Rt) எண். 25, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையில் தடை ஆணை தளர்த்தப்பட்டுள்ளது.

            அதன்படி அரசுத்துறை / அரசு சார்ந்த துறை / நகராட்சி / வாரியம் / தனியார் சங்கங்கள் / தனிப்பட்டவர்கள் ஆகியோரின் நில குத்தகைக்கான கோரிக்கைகளுக்கு இணங்க மூன்று வருடங்களுக்கு மிகாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், பெருநகர  சென்னை மாநகராட்சி யால் கணக்கிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட தொகையில் நிலங்கள் உரிமம் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

வெவ்வேறு காலகட்டங்களில் வசூல் செய்யப்படும் இழப்பீடு கட்டத்தொகை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம்

எண்.

4945/93, தேதி 16.12.93 1741/96, தேதி 17.08.96 3541/97, தேதி 29.10.97 432/2000, தேதி 20.07.2000 தேதி 20.07.2000      குடியிருப்பு எண் 500/2004, தேதி 23.12.2004
காலங்கள்   01.04.89 முதல் 16.12.93 வரை 01.04.96 முதல் 30.09.97 வரை 01.10.97 முதல் 31.03.2000 வரை 01.04.2000 முதல் 31.03.2003 வரை 01.04.2003 முதல் 31.03.2005 வரை
வணிகம்    ரூ.1000/- ரூ.1200/- ரூ. 2400/- ரூ.2640/- ரூ.3036/-
வணிகம் அல்லாதவை  ரூ. 500/- ரூ.600/- ரூ.1200/- ரூ.1320/- ரூ.1518/-
அறக்கட்டளை    ரூ. 250/- ரூ.300/- ரூ.600/- ரூ.660/- ரூ.759/-
 

            பெருநகர  சென்னை மாநகராட்சி யின் வணிக கடைகளை ஒப்பம் மற்றும் ஏலம் மூலமாக ஓராண்டிற்கு உரிமம் அடிப்படையில் விடப்படுவது தொடர்பான செய்திகளை ஆங்கில செய்தித்தாள், பெருநகர  சென்னை மாநகராட்சி செய்தி மலர், தமிழ் செய்தித்தாள், ஒவ்வொரு வணிக வளாகத்திலும் மாநகராட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது மற்றும் மாநகராட்சியின் மன்ற உறுப்பினர்கள் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பம் மற்றும் ஏலத்தில் கலந்து கொள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனித்தனியாக ஒவ்வொரு கடைக்கும் விண்ணப்பங்களைப் பெறவேண்டும். அதேபோல் ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக ஒப்ப வைப்புத் தொகைகளை செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 250/- ஆகும். செலுத்தப்பட வேண்டிய ஒவ்வொரு ஒப்ப வைப்புத்தொகையும் ரூ. 5000/- ஆகும்.

            விண்ணப்பப்படிவம் மற்றும் ஒப்ப வைப்புத் தொகைக்கான தொகையை வருவாய்த்துறை அலுவலர், பெருநகர  சென்னை மாநகராட்சி என்ற பெயருக்கு வரைவு காசோலையை வங்கியிலிருந்து பெற்று அளிக்க வேண்டும். கடிதம் மூலம் ஏலத்தில் எடுத்தவருக்கு தெரிவித்தவுடன் ஏலத்தில் எடுத்தவர் ஒவ்வொருவரும் 12 மாத வாடகை தொகையில் 25 சகவீதம் தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். மீதித் தொகையான 12 மாத வாடகை தொகையில் 75 சதவீதம் தொகையை அளித்தபிறகு கடை அளிக்கப்படும். அதற்கு முன்பாக உரிமத்திற்கான உடன்படிக்கை ஏலம் எடுத்தவர் செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமான நிபந்தனைகள் மற்றும் விதிறைகள் கீழ் அளிக்கப்பட்டுள்ளன :

  • உரிமத்தின் கால வரம்பு ஒரு வருடம்.
  • உரிமம் பெற்றவர் மாத உரிமம் கட்டணமாக ஒவ்வொரு மாதத்திற்கும் 5 ஆம் தேதிக்குள் வருவாய் அலுவலர், பெருநகர  சென்னை மாநகராட்சி என்ற பெயருக்கு வரைவு காசோலை மூலமாக செலுத்த வேண்டும்.
  • உரிமம் பெற்றவர் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் உரிமம் கட்டணத்தை (வாடகை) செலுத்தாத பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூ.10/- வீதம் அபராகமாக செலுத்த வேண்டும்.
  •   உரிமம் பெற்றவர் கடைக்கான மின் கட்டணத்தை நேரிடையாக மின் வாரியத்தில் செலுத்த வேண்டும். மேலும் தங்களின் வியாபார சம்பந்தமான மற்ற கட்டணங்களை தாங்களே நேரிடையாக செலுத்த வேண்டும்.
  •    உரிமம் பெற்றவர் உரிமம் அளித்த அலுவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி ஒதுக்கப்பட்ட கடைகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யக்கூடாது.
  • உரிமம் பெற்றவர் தங்களின் கடைகளை எவருக்கும் பாகமாகவோ அல்லது முழுவதுமாகவோ உள் வாடகைக்கு விடக்கூடாது.
  • உரிமம் பெற்றவர் எந்த உபயோகத்திற்காக விண்ணப்பித்தார்களோ அந்த உபயோகத்திற்காக மட்டுமே கடைகளை உபயோகப்படுத்த வேண்டும். கடை உபயோகத்தை மாற்றப்பட வேண்டும் எனில் உரிமம் அளித்த அலுவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்.
  •   ஒதுக்கப்பட்ட உரிமம் அளித்த அலுவலருக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிமம் அளித்த அலுவலர் கடையை திரும்பப் பெறும் வகையில் உரிமம் பெற்றவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் உரிமம் பெற்றவர் கடையை காலி செய்ய விரும்பும் பட்சத்தில் உரிமம் அளித்த அலுவலர் கடையை திரும்பப் பெறும் வகையில் உரிமம் அளித்த அலுவலருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும். உரிமம் பெற்றவர் கடையை உரிமம் அளித்த அலுவலருக்கு திரும்ப அளிப்பதற்கு முன்பாக உரிமம் அளித்தவருக்கு செலுத்த வேண்டிய கடை தொடர்பான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். உரிமம் பெற்றவர் உரிமம் கட்டணத்தை தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு செலுத்தாத பட்சத்தில் எந்தவித முன் அறிவிப்பின்றி உரிமம் அளித்த அலுவலர் தன்னிச்சையாக ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • உரிமம் பெற்றவர் உரிமத்தின் காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பினால் முழுவதுமாக 9 மாத காலங்கள் முடிந்த தருவாயில் புதுப்பிக்கும் விண்ணப்பத்தைப் பெற உரிமம் அளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதுப்பிக்கும் திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமம் அளிக்கும் அலுவலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்றவர் மாத உரிமம் கட்டணத்தை தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு செலுத்தாத பட்சத்தில் அல்லது  கடை பூட்டப்பட்டு இருப்பின் ஒதுக்கீடு ஆணையை திரும்ப பெறுவதற்கும், காவலர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து கடையைத்திறக்கவும், கடையில் உள்ள பொருட்களின் விவரப் பட்டியல் தயாரித்து கடையில் உள்ள பொருட்களை அகற்றி தன் பாதுகாப்பில் வைக்கவும் உரிமம் அளித்த அலுவலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • உரிமம் பெற்றவர் தங்கள் கடைக்கு மின் இணைப்பு தேவைப்பட்டால், உரிமம் பெற்றவரே அவருடைய பெயரில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெற்றவர் கடையில் உள்ள மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகள் போன்றவற்றை சேதப்படுத்தக்கூடாது.
  • உரிமம் பெற்றவர் பெருநகர  சென்னை மாநகராட்சி யின் பெயர் பலகை மற்றும் அதில் உள்ள பெயர்களை சேதப்படுத்தக்கூடாது.

குடியிருப்பவர் மற்றும் குடிசை நிலத்திலிருந்து வாடகை வசூலித்தல்

பெருநகர  சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளின் விபரம் கீழே அளிக்கப்பட்டுள்ளது :

குடியிருப்புகளின்பட்டியல்

வ. எண். பெயர் மற்றும் குடியிருப்புகளின் இருப்பிடம்    மொத்த குடியிருப்புகள்
1 சிமெட்ரி சாலை லைன், வண்ணாரப்பேட்டை 186
2 சுட்லை விநாயகர் கோயில் தெரு, பிராட்வே  14
3 ஆர்.எஸ்.எண். 1896 தண்டையார்பேட்டை 5
4 பேசின் பிரிட்ஜ் சாலை குடியிருப்புகள்  30
5 பண்டர் ராம நாய்க்கன் தோட்டம் .......... பிராட்வே,  146
6   போகிபாளையம் ....................(பெரம்பூர் படைவீடு சாலை)    316
7 கான்ரேன்ஸ்மித் நகர் (பெரம்பூர் படை வீடு சாலை)    111
8 கல்யாண் மேஸ்திரி முதலி தோட்டம்   54
9 செல்லப்ப தெரு, ஓட்டேரி  52
10 அங்காளம்மன் தெரு, ஓட்டேரி 6
11 சாமி ரெட்டி பேட்டை ,,,,,,,,,,, எழும்பூர்   65
12 பேகம் சாகிப் தெரு, இராயப்பேட்டை   20
13 பேகம் சாகிப் தெரு, இராயப்பேட்டை 9
  மொத்தம்  1014

            மேற்குறிப்பிட்ட குடியிருப்புகளில் உள்ளவர்கள், குடியிருப்புகளை தங்களின் பெயருக்கு மாற்றி வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 21-7-1997 நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் கடித எண் 183 ன்படி குடியிருப்பவர்களுக்கு சாதகமாக தடையை தளர்த்துவதற்கான செயற் குறிப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டாம் என வலியுருத்தி உள்ளது. மேலும் பணியில் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் வாடகை அடிப்படையில் குடியிருப்புகளை ஒதுக்க அரசு வலியுறுத்தியுள்ளது. குடியிருப்பவர்களிடமிருந்து வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளிடமிருந்து பெறும் வாடகைகளின் ஆண்டு வருமானம் சுமாராக ரூ. 12 இலட்சங்கள் ஆகும்.

குடிசை நிலங்கள்

பெருநகர  சென்னை மாநகராட்சி யின் குடிசை நிலங்கள் உள்ள பகுதிகள் கீழ் அளிக்கப்பட்டுள்ளன :

குடிசை நிலங்களின் பட்டியல்

வ.எண்.

இடங்கள்

1

மார்கெட் பார்ம், மண்டலம் 1

2

ஸ்டான்லி  நகர், மண்டலம் 2

3

நரசிம்ம நகர், மண்டலம் 3

4

இராம் நகர், மண்டலம் 6

5

துவாரகா நகர், மண்டலம் 6

6

கண்ணம்மாபேட்டை, மண்டலம் 8

7

காந்தி நகர், மண்டலம் 8

8

மாநகராட்சி குடியிருப்பு, இரங்கராஜபுரம், மண்டலம் 8


தெருக்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றிற்கு பெயர்கள் மற்றும் பெயர் மாற்றம் :

            சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டம் 1919ன் 222ன் பிரிவின்படி மாநகராட்சி மன்றம், புதிய தெருக்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், பேருந்து நிலையங்கள், வளைவுகள் மற்றும் புதிய நகராட்சி சொத்துக்களுக்கு மாநில அரசின் ஒப்பத்துடன் மாநகராட்சி மன்றம் பெயரிடுதல் மற்றும் பெயர் மாற்றம் செய்யலாம்

இருப்பினும், 30.06.1998 நாளிட்ட அ.ஆ. (Rt) எண் 113 மற்றும் 14.12.2001 நாளிட்ட அ.ஆ. எண் 573 ன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமான அரசாணையில் பெயரிடுதல் மற்றும் பெயர் மாற்றம் சம்பந்தமான செயற் குறிப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர  சென்னை மாநகராட்சி பகுதிகளில் சிலைகளை நிர்மாணித்தல்

            நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 20.11.1998  நாளிட்ட அ. ஆ. (Rt) எண். 221, ன் அரசாணையில், மாநகராட்சி பகுதிகளில் சிலைகள் நிர்மாணிப்பது தொடர்பாக கீழ் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

  • அரசிடமிருந்து ஆணை பெற்றபின்பே சிலைகள், வளைவுகள் ஆகியவற்றை நிர்மாணிக்க வேண்டும்.
  • ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகள், வளைவுகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சங்கங்களே அவர்களுடைய சொந்த செலவில் பராமரிக்க வேண்டும்..
  • எந்த காரணங்களுக்காகவோ நிர்மாணித்த சிலைகளை வேறு இடத்திற்கு நிறுவுவதற்கு அரசிடமிருந்து ஆணை பெறுவது அவசியம்

சாலை ஓரப்பகுதிகளில் பெட்டிக் கடைகளை அமைத்தல்

            சென்னை நகர முனிசிபல் சட்டம், 1919 ன் 223 (5) ன் பிரிவின்படி சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் பெட்டிக் கடைகளை குறிப்பிட்ட காலங்களுக்கு விதிமுறைகளுக்கு  உட்பட்டு அமைக்க மாநகராட்சி மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள், தொலைபேசி கடைகள் ஆகியவற்றை சாலை மற்றும் தெரு ஓரங்களில் அமைக்க ஊனமுற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 23.3.1992 நாளிட்ட மன்ற தீர்மான எண். 96/92 மற்றும் 20.12.1996 நாளிட்ட மன்ற தீர்மான எண். 560/96 ன்படி இதுமாதிரியான நிர்மானங்களை அமைப்பதற்கான அனுமதியும், மேலும் நீட்டிப்பதற்கான அனுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.