கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டினை வெளியிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

CONSTRUCTION AND DEMOLITION (C&D) WASTE MANAGEMENT GUIDELINES

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை பகுதியில் கைப்பந்து மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் படிப்பகம் மற்றும் நூலகத்துடன் கூடிய பல்நோக்குக் கட்டடம் என மொத்தம் ரூ.43.34 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பாண்டி பஜாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் விக்டோரியா பொது அரங்கம் மற்றும் கொளத்தூர் , திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட திருநகர் பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தினைத் திறந்து வைத்து, ரூ.30 இலட்சம் மதிப்பில் சென்னைக் குடிநீர் வாரியத்தின் பயன்பாட்டிற்காக ஜெட்ராடிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தினை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கண்ணன் காலனி மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களில் வருவாய்த்துறை இயங்கும்.

As the current financial year ends on 31.03.2025, in the interest of the General Public residing at Greater Chennai Corporation limit, the Revenue Department of the Greater Chennai Corporation will operate on holidays from the 29th to the 31st for the payment of property tax, professional tax and company tax, and for the renewal of Trade Licenses. Therefore, the General Public is requested to take advantage of this opportunity

பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.04.2025 முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Online Building Plan Approval System is being followed in Greater Chennai Corporation for processing the Planning Permission Application in online. The Planning Permission Application are being received and processed in online and approval is issued.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் ஆணையர் அவர்களிடம் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். மேலும், விதி 290ன்படி புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையினை மேலும் அதிகரித்திடும் வகையில், தீவிர மாணவர் சேர்க்கை பிரச்சாரப்பணியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் அடையாறு மண்டலம், ஆண்டாள் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூட கட்டடத்தை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், அண்ணாநகர் மண்டலம், வார்டு-106, எம்.எம்.டி.ஏ.காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நெசப்பாக்கம் மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். மற்றும் அன்னைசத்யா நகர் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர 12.03.2025 முதல் 21.03.2025 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வில்லிவாக்கம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.