முகப்பு>>துறைகள்

பெருநகர சென்னை மாநகராட்சி
சட்டக்குழுமம்

  1. பெருநகர சென்னை மாநகராட்சியில் சட்டக்குழுமம் சட்ட அலுவலரின் தலைமையில் கீழ்கண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டமைப்புடன் இயங்கி வருகிறது.
சட்ட அலுவலர்                    துறை தலைவர்
உதவி சட்ட அலுவலர்கள் 2 நபர்கள்
கண்காணிப்பாளர்கள்                   2 நபர்கள்
உதவியாளர்கள்                                           11 நபர்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 2         1 நபர்         
தட்டச்சர்கள்                                               2 நபர்கள்
பதிவுரு எழுத்தர்கள்                          2 நபர்கள்
அலுவலக உதவியாளர்கள்     4 நபர்கள்

           துறைத்தலைவர் அவர்கள் சட்டக்குழுமத்தின் தலைமைப் பணியினையும், வடக்கு வட்டார அலுவலகம் வழக்குகள் தொடர்பான மேற்பார்வை பணிகளை மேற்கொண்டு வருகிறார். உதவி சட்ட அலுவலர்களில் ஒருவர் மத்திய வட்டார அலுவலகம் வழக்குகள் தொடர்பான மேற்பார்வை பணிகளையும் மற்றொருவர் தெற்கு வட்டார அலுவலகம் வழக்குகள் தொடர்பான மேற்பார்வை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்,.

  1. பெருநகர சென்னை மாநகராட்சிக்கெதிராக தொடரப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் கையாளுவதற்காக 37 நிலை வழக்கறிஞர்கள்  கீழ்கண்ட நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகின்றனர். .

சென்னை உயர்நீதிமன்றம்                                                     

13

நகர உரிமையியல் நீதிமன்றம்                                                 

15

சிறுவழக்கு நீதிமன்றம் (ம) தொழிலாளர் நீதிமன்றம்    

3

வெளியூர் வழக்குகள் (ம) நுகர்வோர் நீதிமன்றம்           

1

குற்றவியல் நீதிமன்றம்

1

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதமன்றம்          

1

            சட்டக்குழுமப் பணிகளை விரைவாகவும் உடனுக்குடனும் மேற்கொள்ள உயர்நீதி மன்றத்தில் கீழ் கண்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

1

உதவியாளர்      

1 நபர்
2

அலுவலக உதவியாளர்      

1 நபர்
3

வரி வசூலிப்பவர்

1 நபர்
4

கணினி இயக்குபவர்

1 நபர்
5

குற்றவியல் நீதிமன்றம்

1 நபர்
6

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதமன்றம்

1 நபர்
7

தினமும் விசாரணைக்குவரும் வழக்குகளின் விவரங்கள் அன்றைய தினம் காலை 06.00 மணிக்கு பெறபட்டவுடன் சட்டகுழுமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்ககளின் அடிப்படையில் (LCMS) ஒவ்வொரு வழக்கும்  எந்த மண்டலம், எந்த துறை மற்றும் என்ன பொருள், வழக்கின் நிலை மற்றும் வழக்கறிஞர், போன்ற விவரங்கள்  அனைத்து மண்டலஅலுவலர்கள் துறைத்தலைவர்கள் அறியும்படி வாட்ஸ்அப்மூலம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நடப்பு தேதியில் எந்தெந்த வழக்குகள் விசாரணைக்கு வருகிறது என்பதை அனைத்து அலுவலர்களும் அறியும் வகையில்  எளிதாக்கப்பட்டுள்ளது.