சென்னை வராலாற்றில் ஆரம்பத்தில் எண்ணெய் விளக்குகள் உபயோகிக்கப்பட்டன. தெருவிளக்குகள் முதன் முதலில் 1785-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 1857 ஆம் ஆண்டு வரை 200 எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. படிப்படியாக 1910 ஆம் ஆண்டு 6500 எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. மின் விளக்குகள் முதன் முதலாக 1910 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படன. 1924 முதல் 1925 ஆம் ஆண்டுகளில் அதிக மின் விளக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. எண்ணெய் விளக்குகள் அனைத்தும் மின் விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 2,77,662 எண்ணிக்கை தெரு மின் விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 1,82,775 எண்ணிக்கை மின் சக்தி சேமிப்பு வகையிலான எல்.ஈ.டி. விளக்குகள் ஆகும். இதன் மூலம் 45 சதவீதம் மின்சக்தி சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். |