முகப்பு>>துறைகள்>>  இயந்திரப் பொறியியல்

இயந்திரப் பொறியியல் துறை

            பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய அங்கமான இயந்திரப் பொறியியல் துறை, சீரிய முறையில் வாகனங்களை இயக்கி, குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றி திடக்கழிவு மேலாண்மை துறையின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது.
            பெருநகர சென்னை மாநகராட்சியில் இயந்திரப் பொறியியல் துறையின் கீழ் 1045 எண்ணிக்கைகள் கொண்ட பல்வகை தயாரிப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கீழ்கண்ட பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன

  • குப்பை மற்றும் கட்டிட இடிபாடுகள் அகற்றுதல்
  • தெரு விளக்குகள் பழுது பார்த்தல்
  • சுகாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளான ஆம்புலன்ஸ், கொசுமருந்து தெளிக்கும் பணி மற்றும் கால்நடை பிடித்தல்
  • கல்வி சுற்றுலா செல்ல பள்ளி பேருந்து ஏற்பாடு
  • பூங்காக்கள் மற்றும் சாலை நடுவண் பராமரிப்பு
  • கள ஆய்வு மேற்கொள்ளுதல்
  • சாலை பராமரிப்பு பணிகள்
  • குப்பை கொட்டும் வளாகங்களில் குப்பைகளை கொட்டுதல் மற்றும் சமன்படுத்துதல்
  • ஏரிகள் மற்றும் கால்வாய்களிலுள்ள ஆகாய தாமரை செடிகள் மற்றும் கழிவுகளை அகற்றுதல்


 

வ.எண்

வாகன வகை

எண்ணிக்கை

பயன்பாடு

1.

கனரக காம்பெக்டர்கள் (14 Cu.M கொள்ளளவு)

158

வீதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்லுதல், குப்பைகளை நெருக்குதல் மாற்று வளாகத்திற்கு எடுத்து செல்லுதல்.

2.

இலகுரக காம்பெக்டர்கள்
(6 Cu.M கொள்ளளவு)

211

3.

ஹாலேஜ் டிரக்ஸ்

36

குப்பை மாற்று வளாகத்திலிருந்து அதிக அளவு குப்பைகளை குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லுதல்

4.

டிப்பர் லாரிகள்

117

கட்டிட கழிவுகளை வீதிகளிலிருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லுதல்

5.

மின் பளுதூக்கிகள்

19

தெரு விளக்குகளை பராமரித்தல்

6.

தண்ணீர் லாரிகள்

32

பூங்காக்கள் மற்றும் சாலைகளில் அமைந்துள்ள சென்டர் மீடியன்களை பராமரித்தல்.

7.

எஸ்கவேட்டர்
(கிராப்ளர்)

17

குப்பை மாற்று வளாகத்திலிருந்து ஹாலேஜ் டிரக்குகளுக்கு குப்பைகளைசமன் செய்தல்.

8.

முன்பின் பளுத்தூக்கிகள்

24

கட்டிட கழிவுகளை வீதிகளிலிருந்து டிப்பர் லாரிகளுக்கு மாற்றுதல், அகழிகள் ஏற்படுத்துதல், ஆக்கிரமிப்பகளை அகற்றுதல் குப்பை மாற்று வளாகத்தில் கழிவுகளை தரம்பிரித்தல்

9.

சிறிய வகை லோடர்கள்

57

உட்புற சாலைகள் மற்றும் சேரி பகுதிகளில் உள்ள குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை லாரிகளுக்கு மாற்றுதல்.

10

புல்டோசர்

3

கிடங்குகளில் உள்ள கழிவுகளை சமன் செய்தல்

11.

ஆய்வு வாகனங்கள்

211

ஆய்வு பணிக்காக

12.

இயந்திப் பெருக்கிகள்

13

வீதிகள் மற்றும் சென்டர் மீடியன்களில் படிந்துள்ள நுண்ணிய தூசிகளை பெருக்கி உறிஞ்சி சுத்தம் செய்தல்

13

கால்நடை பிடிக்கும் வாகனங்கள்

18

கால்நடை பிடிப்பதற்காக

14

இலகுரக மூடிய வான்

18

பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக

 

15

பிற வகை வாகனங்கள்

107

பள்ளி பேருந்து, கழிவுகளை அகற்றும் டிராக்டர்கள், ஆம்புளன்ஸ், நாய் பிடிக்கும் வாகனம், கால்நடை பிடிக்கும் வாகனம் மற்றும் சுகாதாரத் துறைக்கு பயன்படும் வாகனங்கள்

16

ஆம்பிபியன் உபகரணம்

1

3.5 மீட்டருக்கு மேல் அகலமுள்ள கால்வாய்களிலுள்ள ஆகாய தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல்

17

ரோபோட்டிக் மல்டி பர்பஸ் எஸ்கவேட்டர்

3

3.5 மீட்டருக்கு குறைவாக அகலமுள்ள கால்வாய்களிலுள்ள ஆகாய தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல்

 


இத்துறையின் செயல்பாடு மற்றும் பணிகள்

  • இத்துறை தற்பொழுது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு மேற்பார்வை பொறியாளரின் தலைமையில் வட்டார செயற்பொறியாளர்கள் மற்றும் தலைமையிடத்தில் ஒரு செயற்பொறியாளர் கொண்டு மூலதன பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • 15 மண்டலங்களிலும் தலா ஒரு பணிமனை (லாரி நிலையம்) ஒரு உதவி பொறியாளர் கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • அந்த பணிமனையின் மூலம் அன்றாடம் மூன்று வேளைகள் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்ற காம்பேக்டர் மற்றும் பிற வாகனங்கள் இயக்கப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிகளும் வாகனங்களின் சிறிய பழுது நீக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பிரதான பணிமனையில் வாகனங்களில் பெரிய பழுதுநீக்கும் பணிகளும் மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  • அன்றாட துப்புரவு பணிகள் மேற்கொள்வதனை கண்காணிக்க வாகனங்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டு, சென்று வந்த தூரம், நடை, அதிவேக பயணம் ஆகியவை உடனுக்குடன் அறியப்பட்டு உடனடி தீர்வு மேற்கொள்ளப்படுகிறது.
  • தற்பொழுது, 172 எண்ணிக்கையிலான இலகுரக, கனரக மற்றும் சிறிய வகை லோடர் வாகனங்கள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
  • மேலும் 12 எண்ணிக்கையில், ஒரு வட்டாரத்திற்கு 4 வீதம், இயந்திரப் பெருக்கி வாகனங்கள் பேருந்து இயக்கப்படும் சாலைகள் மற்றும் சென்டர் மீடியன்களிலுள்ள மணல் மற்றும் தூசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
  • இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 6 எரிபொருள் விநியோகிக்கும் பங்குகள் செயல்படுகின்றன.
  • கால்நடை பிடிக்கும் வாகனங்கள், நாய்பிடிக்கும் வாகனங்கள், ஆட்டோக்கள், முன்பின் பளுதூக்கிகள், ஆம்புலன்ஸ் மற்றும் ஆய்வு வாகனங்களை பராமரிக்க 245 மெக்கானிக் / கிளினர்கள் இயந்திரப் பொறியியல் துறையின் கீழ் உள்ளனர்.
  • பல்வேறு வாகனங்களை பலவகைப்பட்ட பயன்பாட்டிற்கு இயக்குவதற்கு 1140 எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் உள்ளனர்.
  • தேவைக்கேற்ப, வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்தல் இத்துறையின் கடமையாகும்.
  • கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், இரும்பு, மரம் மற்றும் நெகிழிக் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட (M/s. MSTC மத்திய அரசு நிறுவனம்) சேவை நிறுவனம் மூலம் இ-ஏலம் விடப்பட்டு வருகிறது.
  • மேலும், பல்வேறு துறைகளின் தேவைக்கேற்ப பல வகையான அச்சுப் பணிகளான ஐ.எம்.ஆர்.என் புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் கல்வித் துறை சான்றிதழ்கள், படிவங்கள் அச்சடித்தல் மற்றும் பேனர்கள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை மேற்கொள்ள இயந்திரப் பொறியியல் துறையின் கட்டுப்பட்டின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி அச்சகம் மற்றும் எழுது பொருள் பிரிவு இயங்கி வருகின்றது.

சிறப்பு உபகரணங்கள்
      சமீபத்தில், பெரிய மற்றும் சிறிய கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாய தாமரை, குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றி நீர்வழித்தடங்களை சீர்செய்யவும் மற்றும கொசு உற்பத்தி ஆவதை தடுக்கவும் சிறப்பு உபகரணங்கள் பின்லாந்து / ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு  சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1. ஆம்பிபியன் உபகரணம்
      3.5 மீட்டருக்கும் மேல் அகலமுள்ள கால்வாய்களிலுள்ள ஆகாய தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்ற
ரூ. 4.43 கோடியில் 1 எண்ணிக்கையிலான ஆம்பிபியன் உபகரணம் கொள்முதல் செய்யப்பட்டு, 5 வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்குதல் மற்றும் பராமரிப்புபணி (ரூ. 5.53 கோடி மதிப்பீடு) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடு பொறியாளர்களை கொண்ட ஒரு குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2, ரோபோட்டிக் மல்டி பர்பஸ் எஸ்கவேட்டர்
      3.5 மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள கால்வாய்களிலுள்ள ஆகாய தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்ற
ரூ. 19.65 கோடியில் 3 எண்ணிக்கையிலான ரோபோட்டிக் மல்டி பர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணம் கொள்முதல் செய்யப்பட்டு, 4 வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணி (ரூ. 9.28 கோடி மதிப்பீடு) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து உபகரணங்களிலும் GPS கருவி மற்றும் எரிபொருள் உணர் கருவி பொருத்தப்பட்டு அதன் அன்றாட செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
      மேலும் கடற்கரை மணலை சுத்தப்படுத்தும் உபகரணம் மெரினா கடற்கரையில் பயன்பாட்டில் உள்ளது. அதன் மூலம் கந்தல் துணி, காகித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள் ஆகியவை அகற்றப்பட்டு கடற்கரை தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது.


கனரக மற்றும் இலகுரக காம்பேக்டர் வாகனங்கள் வீதிகளிலுள்ள காம்பேக்டர் குப்பை தொட்டிகளிலிருந்து குப்பைகளை எடுத்து குப்பை மாற்று வளாகத்திற்கு எடுத்துச்செல்லுதல்


குப்பை மாற்று வளாகத்தில் காம்பேக்டர் வாகனங்களில் எடுத்து வரப்பட்ட குப்பைகளை கிராப்ளர் எஸ்கவேட்டர் உபகரணம் மூலம் ஹாலேஜ் டிரக்குகளுக்கு மாற்றப்படும். பின், டிரக்குகள் அவற்றை குப்பைகிடங்கிற்கு எடுத்துச்செல்லும்.


ஆம்ப்பியன் உபகரணம்

3.5   மீட்டருக்கு மேல் அகலமுள்ள கால்வாய்க்களில் உள்ள
ஆகாயத்தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கட்டிடக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற ஒரு எண்ணிக்கையிலான ஆம்பிபியன் உபகரணம் பெருநகர சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ரோபாட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்

பெருநகர சென்னை  மாநகராட்சியால், 3.5 மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரை, தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கட்டிடக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற மூன்று எண்ணிக்கையிலான ரோபாட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. அனைத்திலும் எரிபொருள் உணர்கருவி பொருத்தப்பட்டு, அதன் அன்றாட செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இயந்திரப் பெருக்கி

இயந்திரப் பெருக்கிகள் மூன்று வட்டாரங்களிலும் உள்ள சாலைகள் மற்றும் சென்டர் மீடியன்களில் படிந்துள்ள நுண்ணிய தூசிகளை பெருக்கி, உறிஞ்சி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்கரை மணலை சுத்தப்படுத்தும் உபகரணம்

கடற்கரை மணலை சுத்தப்படுத்தும் சிறப்பு உபகரணம் மெரினா கடற்கரையில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. அதன் மூலம் கந்தல் துணி, காகித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள் ஆகியவை அகற்றப்பட்டு கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.