முகப்பு>>துறைகள்

பூங்காக்களும்

பசுமை புரட்சி

        பெருநகர  சென்னை மாநகராட்சி யில் எழில் மிகு பூங்காக்கள் , சாலை ஓர பூங்காக்கள், சாலை தீவுத்திடல்கள், சாலை மையத் தடுப்புகள் மற்றும் பாலங்களின் கீழம் பலவிதங்களில் மேம்படுத்தி பசுமைப்புரட்சி செய்யப்படுகின்றது.  பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் அவென்யூ மரங்கள் நடப்பட்டு வருகின்றது.  பிரதான சாலைகளில் நடப்பட்டு வரும் பசுமை மரங்களால் சுற்று சுழலில் கார்பன் டை யாக்ஸ்செடு குறைந்து நல்ல மாசற்ற சுத்தமான காற்றை பொது மக்கள் சுவாசிக்க வழி வகுக்ககின்றது. காய்ந்த உலர்ந்த தோற்றதை இயற்கை எழிலுடன் கூடிய பசுமையான தோற்றத்தை உருவாக்குவது தமிழ்நாட்டின் தலைநகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் , இங்கு வாழும் மக்கள் மற்றும் வந்து செல்லபவர்கள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை பூக்க வைக்கின்றது.

பூங்கா

        பெருநகர  சென்னை மாநகராட்சி யில் மொத்தம் 525 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.  அதில் பெரிய பூங்காக்களாகிய ராயபுரத்தில் உள்ள அண்ணா பார்க், இராஜாஜி சாலையில் உள்ள தலைமை செயலக பூங்கா, பெரம்பூரில் உள்ள பெரம்பூர் மேம்பால பூங்கா, பெரியமேட்டில் உள்ள மைலேடிஸ் பூங்கா, கோயம்பேட்டில் உள்ள ஜெய் நகர் பூங்கா, எழும்பூரில் உள்ள மேயர் சுந்தரராவ் பூங்கா, தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா, நெசப்பாக்கம் ஏரிக்கரை பூங்கா, அடையாரில் உள்ள இந்திரா நகர் பூங்கா. அண்ணா நகரில் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா, சிந்ததாதிரிபேட்டையில் உள்ள மே டே பூங்கா,  நுங்கம் பாக்கத்தில் உள்ள சுதந்திர தின பூங்கா, தியாகராயரில் உள்ள பனகல் பூங்கா, கே. கே. நகரிலுள்ள   டாக்டர் எம்.ஜி.ஆர். பூங்கா மற்றும் மைலாப்பூரில் உள்ள டாக்டர் நாகேஸ்வர பூங்கா ஆகியவை முக்கிய பூங்காக்கள் ஆகும்.  இதில் சுதந்திர தினப்பூங்கா பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, சிவன் பார்க் (Dr.M.G.R.) பூங்கா, இந்திரா நகர் பூங்கா. டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காக்களில் வண்ண விளக்குகள் , நீரூற்றுகள் ஆகியவை அமைத்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.           

       சென்னை புளியந்தோப்பு மற்றும் யானைகவுனி ரோடு ஆகிய  சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சமூக விரோதிகள். குடிசைப்போட்டு, மாட்டுத்தொழுவம், தூர்நாற்றம் வீசும் கழிவு இடமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்ததை எழில்மிகும் பூங்காக்களாக உருவாக்கப்பட்டது.  நெரிசலான புளியந்தோப்பு இடத்தில் ஆரோக்கியமான இடமாக அமைந்தது. இம்மாதிரி நுங்கம்பாக்கம் , கல்லூரி சாலையில் உள்ள  சுகாதாரமற்ற குடிசைகளை அகற்றி அழகான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் ஸ்ரீராமலு பூங்கா புதுப்பித்து எழிலூட்டப்பட்டுள்ளன.  கீழ்பாக்கத்தில் உள்ள நேரு பூங்கா மற்றும் சில பூங்காக்களை பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது.  பூங்காக்களில் அழகான நடைபாதை, நீரியம்,காஸ்பிசியா, இக்சோரா ஆகிய அழகிய செடிகள் நடப்பட்டும் நீருற்று , நீர்வீழ்ச்சி, அமரும் இருக்கைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.  திறந்தவெளி நிலம் மற்றும் கால்வாய் கரைகள் மேம்படுத்துதல்  மற்றும் உபயோகமற்று உள்ள விசாலாமான திறந்தவெளி நிலங்களை பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

       நேப்பியர் பாலம் அருகிலுள்ள திறந்தவெளி 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் நடைபாதை அருகில் உள்ள இடத்தையும் டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள திறந்தவெளி நிலத்தையும் கோட்டூர் புரம், சித்ரா நகர், காந்திமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி நிலத்திலும் பூங்காக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், கால்வாய்க்கரைகளை நடைபாதை, நீரூற்று சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அழகிய வண்ணச்செடிகள் ஆகியவைகளுடன் அழகிய பூங்கா  உருவாக்கப்பட்டுள்ளது.

       சுவாமி சிவானந்தா சாபுல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள திறந்தவெளி நிலத்தையும் கோட்டூர் புரம், சித்ரா நகர், காந்திமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி நிலத்திலும் பூங்காக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், கால்வாய்க்கரைகளை நடைபாதை, நீரூற்று சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அழகிய வண்ணச்செடிகள் ஆகியவைகளுடன் அழகிய பூங்கா  உருவாக்கப்பட்டுள்ளது.

       சுவாமி சிவானந்தா சாபுல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள திறந்தவெளி நிலத்தையும் கோட்டூர் புரம், சித்ரா நகர், காந்திமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி நிலத்திலும் பூங்காக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், கால்வாய்க்கரைகளை நடைபாதை, நீரூற்று சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அழகிய வண்ணச்செடிகள் ஆகியவைகளுடன் அழகிய பூங்கா  உருவாக்கப்பட்டுள்ளது.

       சுவாமி சிவானந்தா சாலை காமராஜர் சாலை முதல் அண்ணா சாலை வரை உள்ள கூவம் நதிக்கரைகளை மேமம்படுத்தப்பட உள்ளது.  முக்கிய சாலைகளில் உள்ள கால்வாய்களை கடக்கும் பாலங்களின் சந்திப்பில் பசுமையுடன் மேம்படுத்தப்பட்டது.  அவ்விடத்தை கடக்கும் மக்களுக்கு நல்ல காட்சியாக அமைந்துள்ளது.  கொடுங்கையூரில் உள்ள  வடசென்னை குப்பை கொட்டும் வளாகத்தின் வெளியில் அழகிய பசுமை மயமாக மாற்றப்படவுள்ளது.

சாலை தீவுத்திடல்கள்

            சாலை சந்திப்பில் உள்ள  தீவுத்திடல்களில் அழகிய ஓடுகள் மற்றும் கிரில் அமைத்து அழகுப்படுத்தப்பட்டுள்ளன. செடிகள் அழகிய செடிகள் நடப்பட்டுள்ளது.  சில தீவுத்திடல்களில் நீரூற்றுகளில் அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

       சுமார் 128 சாலை போக்குவரத்து தீவுதிடல்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  அதில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால்  பராமரிக்கப்படுகின்றன.

சாலை மையத் தடுப்புகள்

            முக்கிய பிரதான சாலைகளில் சாலை மைய தடுப்புகள் பசுமையான செடிகள் நடும் வண்ணம் 118 இடங்களில் கட்டப்பட்டுள்ளன.  அதில் குறிப்பாக நல்ல பசுமையான செடிகளான இக்சோரா, நீரியம் , பைசோனியா ஆகியவை நடப்பட்டுள்ளன.

அவென்யூமரங்கள்

            முக்கியமான  சாலைகளில் அவென்யூ மரங்கள் மரவகையில் பிரத்யோகமாக நடப்பட்டுள்ளன.  உதாரணமாக டெலோக்ஸ், பெட்ரோபேராம் ஆகிய  மரங்கள் நடப்பட்டன.  2005-2006 ஆம் ஆண்டு சுமார் 6413 அவென்யூ மரங்கன்றுகள் பெருநகர  சென்னை மாநகராட்சி யில் நடப்பட்டுள்ளன.

நர்சரி

            மைலேடீஸ் பூங்கா, அண்ணா பூங்கா , அண்ணா நகர் டவர் பூங்கா மற்றும் நாகேஸ்வரராவ் பூங்கா ஆகிய இடங்களில் சிறிய நர்சரி பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.

நீர்பாசனம்

            பெருநகர  சென்னை மாநகராட்சி யில் பராமரிக்கப்பட்டு எல்லா பசுமையான செடிகளுக்கு தினமும் தண்ணீர் விடப்பட்டு நன்கு வளர பாதுக்காக்கப்படுகின்றன.  போர் கிணறுகள் அமைத்து பூங்காக்களுக்கு நீர்பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. சாலை மையத்தடுப்பு மற்றும் சாலை தீவுகளில் உள்ள செடிகளுக்கு போர் கிணறுகள் மற்றும் கனரக வாகனங்களின் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் பராமரிக்கப்படுகின்றது.  பொது மக்களுக்காக நிலத்தடி நீர் எடுப்பதை குறைக்கும் வண்ணம் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் துறையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை கனரக வாகனங்கள் மூலம் பெறப்பட்டு பூங்கா பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது

            பொது மக்களுக்காக நிலத்தடி நீர் எடுப்பதை குறைக்கும் வண்ணம் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் துறையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை கனரக வாகனங்கள் மூலம் பெறப்பட்டு பூங்கா பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது

            பொது மக்களுக்காக நிலத்தடி நீர் எடுப்பதை குறைக்கும் வண்ணம் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் துறையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை கனரக வாகனங்கள் மூலம் பெறப்பட்டு பூங்கா பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது

 

விளையாட்டுத்திடல்கள்

            பெருநகர  சென்னை மாநகராட்சி பல்வேறு விளையாட்டு திடல்களை உருவாக்கி சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி தந்து பராமரித்து வருகிறது. விளையாட்டுகள் இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக உருவாக்கவும் நல்வழிப்படுத்தவும், உடல் மற்றும் உள்ளம் வலிமை பெறவும் உதவுகிறது. பெருநகர  சென்னை மாநகராட்சி யின் 300 ஆண்டு கால வரலாற்றில் 1947க்கு முன்பு பெருநகர  சென்னை மாநகராட்சி 18 விளையாட்டு திடல்களை பராமரித்து வந்தது. தற்போது 210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், 4 இறகு பந்து உள்விளையாட்டரங்கம், 1 கூடைபந்து உள்விளையாட்டரங்கம், 2 நீச்சல் குளங்கள் பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 210 விளையாட்டு திடல்களில் 14 -க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைபந்து, பூ பந்து , கூடை பந்து போன்ற மைதானங்கள் அமைக்கப்பட்டு நட்சத்திர விளையாட்டு திடல்களாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 22 உடற்பயிற்சி கூடங்களில் மல்டிஜிம் , டிரெட்மில் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு கற்பிப்பதற்கு உடற்பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினசரி 50 முதல் 100 வரையிலான நபர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
            இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் மந்தவெளி பாக்கம், ஆர்.ஆர் காலனி, ஜாஃபர்கான் பேட்டை, மைலாப்பூர் கற்பகம் அவென்யூ மற்றும் செனாய் நகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. கூடைபந்து உள்விளையாட்டு அரங்கம் கீழ்பாக்கம் கார்டனில் அமைந்துள்ளது. ஸ்கேட்டிங் ரிங்க் அண்ணா நகர், செனாய் நகர், நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கே.கே நகர் மற்றும் தி.நகரில் உள்ளது. நீச்சல் குளம் மெரினா கடற்கரை மற்றும் மை லேடிஸ் பூங்காவில் அமைந்துள்ளது.