பேருந்து சாலைகள் துறை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, இந்திய தேசத்தின் நான்கு பெருநகரங்களில் ஒன்றாகும். பெரும்பான்மையான நிர்வாக அலுவல்கள், தொழில் நுட்பம், வியாபாரம், தகவல் மற்றும் தொழில் நுட்பம், கல்வி, சமூக கலை செயல்பாடுகள் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி யால் சென்னை நகர சாலைகளை பராமரித்தல் என்பது முக்கியமானதும் மற்றும் சவாலான பணியாகும். கடந்த சில வருடங்களில் சென்னை நகர சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களான இந்திய தொழில் நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் போன்ற நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை பொது மக்களுக்கு அளிப்பதற்கு உறுதுணை புரிந்து வருகின்றன.
சட்டமுறை வழிவகைகள்
சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919, பிரிவு 204-ன்படி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காக பொதுத் தெருக்களை அவ்வப்போது சீர்செய்தும், மேம்படுத்தியும் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
பேருந்து சாலைகள்
சென்னை மாநகரத்தில் சுமார் 387.35 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகளும், 5623 கி.மீ நீளமுள்ள உட்பிரிவு சாலைகளும் உள்ளன. இப்பேருந்து சாலைகள் பெருநகர சென்னை மாநகராட்சி யால் பேருந்து சாலைகள் துறை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சாலைகள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பேவர் மூலம் மேம்படுத்தப்படுகின்றது. பேருந்து சாலைகள் மேம்படுத்துதல் என்பது, 40 மி.மீ. கணமுள்ள அழுத்த தார் கலவை (சி.பி.சி.) மற்றும் சாலையின் அடிப்பரப்பு பழுதுபட்டு இருந்தால் 50 மி.மீ. கணமுள்ள அடர்ந்த தார் கலவை (டி.பி.எம்.) ஆகியவை அடங்கும்.சாலை அமைக்க தார் கலவை, ஒப்பந்ததாரர்களின் மூலமாக சென்னை நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தார் கலவை நிலையத்தில் தயாரிக்கப்பட்டு, பேவர் இயந்திரம் மூலம் அமைத்து, அதிர்வு உருளைகள் மற்றும் நில உருளைகள் மூலம் குறிப்பிட்ட வெப்ப நிலையில் அழுத்தப்படுகிறது. தார் கலவை எல்லா நிலைகளிலும் வெப்ப நிலை , (MORTH) வரைமுறைப்படி பாதுகாக்கப்படுகின்றது. இதன் மூலம் சமச்சீரான சாலை உருவாக்க முடிகின்றது. இம்முறையின் மூலமாக விரைவாகவும் அதிக போக்குவரத்திற்கு சிரமமில்லாமலும் சாலைகள் அமைக்க ஏதுவாகிறது. போக்குவரத்தின் இடையூறை தவிர்க்கும் பொருட்டு இப்பணிகள் இரவில் மேற்கொள்ளப்பட்டு, காலையில் போக்குவரத்திற்கு திறக்கப்படுகின்றது. இப்பணி முழுவதும், (MORTH) வரைமுறைப்படி சிறிதும் பிறழாமல் மேற்கொள்ளப்படுகிறது.
அகழ்ந்தெடுத்தல்
பேருந்து சாலைகள் 2008-ம் ஆண்டு முதல் சாலையின் மட்டம் உயரும் வண்ணம் 40 மி.மீ. ஆழத்திற்கு அகழ்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் சாலைகள் 40 மி.மீ. கணத்திற்கு அமைக்கப்படுகின்றது.
மேஸ்டிக் ஆஸ்பால்ட்
பேருந்து சாலைகளில் போக்குவரத்து சந்திப்புகளிலும், நிறுத்தங்களிலும் 25 மி.மீ. கணத்தில் மேஸ்டிக் ஆஸ்பால்ட் மேற்பரப்பாக அமைக்கப்படுகின்றது. இம்மேஸ்டிக் ஆஸ்பால்ட், வாகனங்கள் நிறுத்தத்தினாலும் கனரக வாகனங்கள் நகரும்போது சாலையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் உராய்வுகளினாலும், சாலையின் மேற்பரப்பு பழுதாகாமல் தடுக்கின்றது. இந்த சிறந்த தொழில் நுட்பம் திடீரென்று வாகனங்கள் நிறுத்துவதின் மூலம் ஏற்படும் சேதத்தினையும் தவிர்க்கின்றது.
பள்ளங்கள் சீர் செய்து ஒட்டு வேலை பணிகள்
சாலைகள் மேம்படுத்துவதை தவிர சாலைகளில் மழையாலும், இயற்கை சீற்றங்களினாலும், மற்ற துறைகளால் ஏற்படுத்தப்படும் சாலை வெட்டுகளினாலும் ஏற்படும் பள்ளங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி யின் சேத்துப்பட்டில் உள்ள தார் கலவை நிலையத்தில் தயாரிக்கப்பட்ட தார் கலவைகள் மூலம் சமன் செய்யப்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் தயாரிக்கப்படும் தார் கலவைகள், தேவையான சம்பந்தப்பட்ட கோட்டங்களுக்கு ஒட்டு வேலைப்பணி மேற்கொள்ள அனுப்பப்படுகின்றது.
சாலை வெட்டுக்கள்
பேருந்து சாலைகளில் சாலை வெட்டுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம், கோரிக்கையின் அடிப்படையில் சாலை வெட்டு சமன் செய்யும் தொகையை பெருநகர சென்னை மாநகராட்சி செலுத்திய பின்பு அனுமதி அளிக்கப்படுகின்றது. மற்ற பராமரிப்பு துறைகளான சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தொலைபேசித்துறை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றவர்களால் ஏற்படுத்தும் சாலை வெட்டுகளையும் கருத்தில் கொண்டு சாலைகள் உடனுக்குடன் சமன் செய்து மேற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் சில சமயங்களில் ஏற்கனவே உள்ள சாலைகளுடன் சரியாக சமன் ஆவதில்லை. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் தவிர்க்க இயலாததாகின்றது. உயர் தொழில் நுட்பக்குழு மூலம் ஆலோசனைகள் பெற்று, இக்குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்.
சென்னை மாநகரில் 1296.22 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கீரீட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இச்சாலைகள் அமைக்கும் செலவு கூடுதலாக இருப்பினும், பராமரிப்பு செலவு குறைவு மற்றும் இதன் ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
சிமெண்ட் கான்கீரீட் சாலைகள் இரண்டு விதங்களில் அமைத்தல்.
1.சாலையின் அகலம் 2.8 மீட்டருக்கு குறைவாக உள்ள குறுகிய சாலைகள் மற்றும் வாகனங்கள் குறைவாக செல்லும் சாலைகளிலும் அடித்தளமாக 100 மி.மீ. கணத்தில் 1:4:8 கான்கிரீட் அமைத்தும் சாலை வடிவமைக்கப்படுகின்றது.
2.கனரக வாகனங்கள் செல்லும் சாலைகள், நீர்த் தேக்கத்தினால் அடிக்கடி பழுதாகும் சாலைகள் மற்றும் சென்னை குடிநீர் நிரப்பு நிலையங்கள் உள்ள சாலைகளில் அங்குள்ள மண்ணின் தன்மைக்கேற்பவும், வாகன போக்குவரத்தாலும், (MORTH) வரைமுறைக்கேற்றவாறு கீழ்க்கண்டவாறு வடிவமைக்கப்படுகின்றது.
- Granular base Course - 150 மி.மீ. முதல் 250 மி.மீ. வரை கனத்தில் மணல் மற்றும் கிராவல் கலவை,
- Sub-base Course - 150 மி.மீ. கணத்தில் எம்-10 கலவை பயன்படுத்தி உலர்.சிமெண்ட்கான்கிரீட்கலவை
- Wearing Course - 250 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை கனத்தில்
எம்-40 கலவை பயன்படுத்தி Pavement quality concrete
நடைபாதை
சாலைகளை மேலும் மெருகூட்டும் விதமாக நடைபாதைகளை ஐ.ஆர்.சி. அளவு 450 X 125 மி.மீ. கனம் கொண்ட சிமெண்ட் கான்கிரீட் கெர்ப் மற்றும் 125ஒ50 மி.மீ. கனம் கொண்ட சிமெண்ட் கான்கிரீட் இன்டர்லாக்கிங் பேவர் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றது.
போக்குவரத்து மைய தடுப்பு
பேருந்து சாலைகளின் வாகன போக்குவரத்து இலகுவாக அமைய மையத்தடுப்பு கிரானைட் கற்கள் கொண்ட இரும்பு கிராதியுடன் அமைக்கப்படுகின்றது. இந்த போக்குவரத்து மையத் தடுப்புகள் சாலையின் அகலத்திற்கேற்ப சுயனேடிஅ Random Rubble Masonry 0/90 மீ. உயரத்திலும், 0.60 மீ முதல் 0.90 மீ. அகலத்திலும் அமைக்கப்படுகின்றது. மையத் தடுப்பின் இரு சுவர்களுக்கும் இடையில் பசுமையான செடிகள் நடப்படுகின்றன.