முகப்பு>> துறைகள்

கட்டிடத்துறை  

சென்னை மாநகராட்சி கட்டடத்துறையின் செயல்பாடுகள்

     சென்னை மாநகராட்சியின் அனைத்து துறைகளின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் கட்டடங்கள் கட்டடத்துறையின் மூலம் கட்டப்பட்டு வருகின்றன.  இத்துறையின் தலைவர் மேற்பார்வை பொறியாளர் ஆவார்.

     சென்னை மாநகராட்சியின் வெவ்வேறு துறைகளிலிருந்து அனைத்து வகையான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான செயல்திட்டங்கள் கட்டடத்துறையில் பெறப்பட்டபின் ஆராய்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பங்கள் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் கட்டடத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.  இதைத் தவிர்த்து, கூடுதல் கட்டடங்கள், அபிவிருத்திப் பணிகள் போன்ற பணிகளும் கட்டடத்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன.  கட்டடத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டடங்களில் பள்ளிக்கட்டடங்கள், கலையரங்கங்கள், தொழிற்பயிற்சி மைய கட்டடம், வணிகவளாகங்கள் / அங்காடிகள், மீன் அங்காடி, கடைகள்,  நவீன பொதுக்கழிப்பிடங்கள், சமூகநலக் கூடங்கள் / திருமணக் கூடங்கள், வார்டு / பகுதி / மண்டல / வட்டார அலுவலகங்கள்,  மழலையர் காப்பகம், நவீன குப்பை மாற்று நிலையம், மருந்தகங்கள், சித்தா மருந்தகம், சுகாதார நிலையங்கள், குடும்பநல மையங்கள், குழந்தைகள் நல மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், பல்நோக்கு விளையாட்டு அரங்கம், கால்பந்து அரங்கம், கைபந்து அரங்கம், இறகு பந்து அரங்கம், உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், எரிவாயு / மின்சார எரியூட்டக மயான பூமிகள், சலவைத்துறைகள், இறைச்சிக் கூடங்கள்,  மற்றும் புராதன சின்னங்களான ரிப்பன் மாளிகை மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹால் புனரமைப்புப் பணிகள் போன்ற கட்டுமானப் பணிகள் அடங்கும்.

     மூலதன நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டடப்பணிகள் தவிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் கட்டடப் பணிகள் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டடத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.  மேலும், சென்னை மாவட்டத்தில் அடங்கிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் இராஜ்யசபா / லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு காசோலை வழங்குவது தொடர்பான பணிகள் கட்டடத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     மேலும் இத்துறையின் கீழ் சில  சிறப்புத்திட்டங்கள், ஹட்கோ, டி.என்.யூ.டி.எப், டுபிட்கோ, ஆகிய நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெற்று மேற்கொள்ளப்படும்.

     கட்டடத்துறையின் மூலம் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.  கட்டிடத்துறையில் ஒரு தலைமைப் பொறியாளர்(கட்டடம்), ஒரு மேற்பார்வை பொறியாளர், நான்கு செயற்பொறியாளர்கள், ஆறு உதவி செயற் பொறியாளர்கள்,  ஒன்பது உதவி / இளநிலை  பொறியாளர்கள் ஒரு வரைவாளர் மற்றும் ஒரு உதவி வரைவாளர் ஆகியோர் கொண்டதாக இயங்கி வருகிறது. மேலும் இப்பணிகளை மேற்கொள்ளும் அனைத்து  அதிகாரிகள் / அலுவலர்களுக்கு துறை மூலமாக வழங்கப்படும் சம்பளம் முதல் ஓய்வூதியம் வரை இதர பணியமைப்பு  பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.