பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் (09.11.2025, 16.11.2025, 23.11.2025 ) நடைபெறவுள்ளது.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள், அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைக் கூடம் மற்றும் வாசிப்பு மண்டலத்தினை திறந்து வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி, 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில், அரசாணை எண்.629, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 16.09.2025ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்று, தற்காலிக கொடிக்கம்பங்கள் நடப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக சென்னை மாவட்டத்தில் 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மாதவரம் மண்டலத்தில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். மேலும், ரெட்டேரி, புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் மணலி ஏரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (02.11.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (01.11.2025) ஒரு நாள் மட்டும் 137 இடங்களிலிருந்து 84.37 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,00,347 தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத், தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகர மக்களின் உடல் நலம் பேணும் வகையில் நடைபெற்ற Get Fit Chennai நடைபயணம் மற்றும் மிதிவண்டி பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள், மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான சாலையில் சீரான போக்குவரத்தினை ஏற்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராயபுரம் மண்டலத்தில் நடைபெறவுள்ள, நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்திட வேண்டும் எனஅலுவலர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், அறிவுறுத்தினார்.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ஆகியோர் பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ஆகியோர் பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப்பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த செல்வி கார்த்திகா அவர்களைப் பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை இன்று (28.10.2025) வழங்கிப் பாராட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழும் மரங்களை அகற்ற 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 01.07.2025 முதல் இதுவரை மழையால் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் இருந்த 66,117 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 22.10.2025 முதல் இன்று (28.10.2025) காலை வரை 4,66,650 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாய், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றில் இணையும் பகுதி மற்றும் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், டெமல்லஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.