இன்று (16.09.2024) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இன்று (16.09.2024) மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் 2025ஆம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (16.09.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இன்று (14.09.2024) மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், மயானபூமிகளில் மேற்கொள்ளப்படும் தீவிரத் தூய்மைப் பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பாரதி நகர், பாலகிருஷ்ணாபுரம் மற்றும் புழுதிவாக்கம் எரிவாயு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
மாண்புமிகு மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 871 பூங்காக்களிலும் இன்று (06.09.2024) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டடம் மற்றும் பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் சார்பில் 8 சென்னை பள்ளிகளுக்கு 1,650 வண்ண மேசை மற்றும் இருக்கைகளை வழங்கினார்.