பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 28.11.2024 முதல் 04.12.2024 வரை நகர்ப்புர சமுதாய நல மையங்களில் நடைபெற உள்ளது.
ஒன்றிய அரசின் SBM (U) 2.0 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோகத் தண்ணீர் மற்றும் கழிவுநீர் சேகரிக்கப் பெற்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் (STP/FSTP) மூலமாக முறையே மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 16.11.2024 மற்றும் 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள்,நீர்வளத்துறையிடமிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து நிலையிலும் மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது என மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் தகவல்
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட புதிய வாழைமா நகரில் புதிதாக கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ஏகாங்கிபுரத்தில் பல்நோக்குக் கட்டடம் ஆகியவற்றைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் 31.12.2024ற்குள் விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டடக் கழிவுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்டிட வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கையடக்கக் கணினிகளை (TAB) இன்று வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.எம்.பிருதிவிராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று வெளியிட்டார்.