மனிதனின் செயல்களே உலகம் முழுவதும் நிகழும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு காரணமாக விளங்குகிறது. உலக நாடுகளின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட குழு (Intergovernmental Panel on Climate Change), அதன் மிக சமீபத்திய அறிக்கையில், 1.5 டிகிரி வெப்பநிலை அதிகரிப்பை, பூமி குறுகிய காலத்திலேயே தொடும் அபாயத்தில் உள்ளதை, ”சிவப்பு குறியீடு” சுட்டிக் காட்டுகிறது.
சென்னை ஐந்தாவது அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரமாகவும் (இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011) மற்றும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. உலக அளவில் கடந்த 20 வருடங்களாக வேகமாக நடைபெரும் நகரமயமாக்குதலால், நகர்புறங்களில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு, கடல் மட்ட உயர்வு, வெப்ப தீவு விளைவு (Heat Island effect) போன்றவை அதிகரித்துள்ளன. இந்தியா, காலநிலை குறிக்கோள்களை அடைய, C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில், 2016ல் சென்னையும் இணைந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வரைவு செயல் திட்டத்தை (Climate Change Action Plan (CCAP)) தயாரித்து வருகிறது, இது சி40 மற்றும் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் (Urban Management Centre) ஆதரவுடன் சி40ன் காலநிலை செயல் திட்டமிடல் கட்டமைப்பின்படி தயாரித்து வருகிறது. சென்னையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வரைவு செயல் திட்டத்திற்கான ஆய்வுப் பகுதியானது, பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்திற்குட்பட்ட 426 சதுர கிமீ மாநகராட்சிப் பகுதியை உள்ளடக்கியது. இந்த வரைவு திட்டம், ஆறு முக்கிய செயல் பகுதிகளின் கீழ் தணிப்பு (Mitigation) மற்றும் தழுவல் (Adaptation) உத்திகளை மையமாகக் கொண்டு, 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நெகிழ்திறன் கொண்ட சென்னையை எதிர்நோக்குகிறது.
சென்னையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாரிக்கபட்டு வரும் செயல்திட்டத்தின் முக்கிய 66 இலக்குகளை கொண்டது இந்த ஆவணம். இதை பற்றிய கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் (27.10.2022).
பெறப்படும் கருத்துகளைக் உள்ளடக்கிய வரைவு செயல் திட்டம் பின் மீண்டும் பொதுமக்களின் கருத்துகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
உங்கள் கருத்துகளை இந்த மின்னஞ்சல் முகவரியில் (ID) பகிரவும் : chennaiclimateactionplan@gmail.com
Cities globally are facing the increased effects of climate change. It is time for us to act now to secure a healthy and livable future for the citizens of Chennai. GCC through the support of C40 Cities and UMC are working towards preparation of a Climate Action Plan for Chennai aligned to the Paris Agreement. The Chennai Climate Action Plan (CCAP) helps build evidence of the city's carbon emissions and the climate risks it faces. Based on the findings of the baseline study, an emissions modeling exercise and spatial mapping of climate risks and vulnerabilities have been done for Chennai to arrive at 6 thematic sectors for climate actions. A list of draft actions have been identified under the 6 thematic sectors through a robust multi-stakeholder consultation process. A gist of the draft Climate Action Plan is uploaded here below.
After receiving the suggestions from the citizens, a draft Climate Action Plan incorporating those suggestions will be published inviting further suggestions / recommendations of stakeholders at all levels.
GCC welcomes citizens of Chennai to provide their suggestions and feedback on this gist of the Chennai Climate Action Plan. Please send in your suggestions and feedback to the email id: chennaiclimateactionplan@gmail.com before 27 October, 2022.
Click here to download the English version.