முகப்பு>> துறைகள்>> பாலங்கள்

பாலங்கள் துறை பற்றிய விவரம்:

     பணித்துறையின் ஒரு பகுதியாக இயங்கி வந்த பாலங்கள் துறையானது 10.02.1994ற்கு பிறகு தனி பாலங்கள் துறையாக இயங்க ஆரம்பித்தது. தற்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்து அனைத்து திசைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்தினை மேற்கொள்ளவும் மேலும் வருங்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு இத்துறையின் மூலம் பல்வேறு பாலப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

       சென்னை மாநகராட்சி பகுதியில் 4 பெரும் நீர்வழிகள் அதாவது கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், அடையாறு மற்றும் ஒட்டேரி நல்லா ஓடுகிறது. இது தவிர சிறு கால்வாய்களான கேப்டன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் போன்றவை துணை நீர்வழிகளாக செல்கின்றன.

      பாலங்கள் துறையின் மூலம் நீர்வழிகளின் இரு பக்கங்களிலும் உள்ள பகுதிகளை இணைப்பதற்காக வாகனப்பாலங்கள், சிறு பாலங்கள், நடைபாலங்கள் கட்டப்படுகின்றன. பாலங்கள் துறை இரயில்வே துறையுடன் இணைந்து போக்குவரத்து நேரத்தினை குறைப்பதற்காகவும் மற்றும் எரிபொருள் மிச்சப்படுத்துவதற்காகவும் இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்றைய நாளில் 272 பாலங்கள்/மேம்பாலங்கள்/சுரங்கப்பாதைகள் (67 உயர்மட்ட பாலங்கள், 32 பெட்டக வடிவ சிறுபாலங்கள், 84 சிறுபாலங்கள், 12 இரயில்வே மேம்பாலங்கள், 16 வாகன சுரங்கப்பாதைகள், 6 பாதசாரிகள் சுரங்க நடைபாதைகள், 6 தரைமட்ட பாலங்கள், 35 நடைபாலங்கள் மற்றும் 14 மேம்பாலங்கள்) ஆகியவை சென்னை மாநகராட்சியின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாலங்கள் பராமரிப்பு பணிகள் அந்தந்த மண்டலங்களின் மூலமாகவும், சிறப்பு பராமரிப்பு பணிகள் பாலங்கள் துறை மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

            1. பாலங்கள் துறைக்கான அமைப்பான்மை அட்டவணை
            2. பாலங்களின் பட்டியல்