|
|
முகப்பு>>
துறைகள்>>
மழைநீர் வடிகால் துறை |
மழைநீர்வடிகால்துறை
|
அறிமுகம் :
நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் சென்னையும் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் பரப்பளவு 176 ச.கி. மீட்டரில் இருந்து 426 ச.கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. மாநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை விரைவாக எட்டுகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி, புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.்டுப்படுத்தப்பட்டுள்ளது.
|
சென்னை மாநகர மாநகராட்சி சட்டம், 1919, பிரிவு 176ல், பெருநகர சென்னை மாநகராட்சி, போதுமான அளவிற்கு வடிகால்களை ஒட்டு மொத்த மாநகரிலும் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று வழிவகை செய்துள்ளது. |
சென்னை மாநகரம் சமதள பரப்பினை கொண்டுள்ளதால் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு மழைநீர் வடிகால் கட்டமைப்பு சென்னை மாநகருக்கு அவசியமாகும். மேலும் மாநகரத்தின் சராசரி நிலத்தின் மட்டம், குறைந்தபட்ச கடல் மட்டத்திற்கு 2 மீட்டர் மேலே மட்டுமே உள்ளது. இவ்வாறு நிலப்பரப்பு சமதளமாக உள்ளதாலும், கடல் அலைகளின் தாக்கத்தினாலும், மாநகரத்தில் மழைகாலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குதலும், வெள்ளப்பெருக்கம் ஏற்படுகிறது. எனவே, தாழ்வான பகுதிகளையும் மற்றும் வெள்ளப்பாதிப்பிற்கும் உட்படும் பகுதிகளையும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீட்க மழைநீர் வடிகால் கட்டமைப்பு அவசியமானதாகும்.
மழைநீர் வடிகால் துறை
பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது. |
|
பொதுவாக, மழைநீர் வடிகால்கள் 7 மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் உள்ள சாலைகளில் அமைக்கப்படுகின்றன. வடிகாலின் குறைந்த பட்ச அளவு 600×700 மி.மீ ஆகும். வடிகாலின் அளவு நீர்பிடிப்புப்பகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு ஆகியவைகளைப் பொறுத்து வடிவமைக்கப்படும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில், சாலையின் அகலம் எவ்வாறு இருந்தாலும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள் வடிவமைக்கப்படுகின்றன. வடிகாலின் உயரம், சாலையின் மட்டத்திலிருந்து 6 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்கும். வடிகாலின் மேற்புற தளத்தின் உயரமும் மனிதநுழைவாயிலின் மூடியும் நடைபாதையின் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும். சாலை குறுக்கில் அமைக்கப்படும் மழைநீர் வடிகாலின் மேற்புற தளத்தின் மட்டம் சாலையின் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும். வடிகால்கள் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் (SFRC/FRP) ஸ்டீல் பைபர் ரீ இன்போர்ஸ்ட் கான்கிரீட்/ பைபர் ரீஇன்போர்ஸ்ட் பாலிமர் ஆகியவைகளினால் செய்யப்பட்ட மனித நுழைவாயில் மூடிகள், சூட் பைப்கள், (மழைநீர் வழிந்தோடும் குழாய்) அமைக்கப்படுகின்றன. இது தவிர மழைநீரினை சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப் படுகின்றன. முன்னரே செய்யப்பட்ட சிமெண்ட் குழாய்கள், (Precast Rccdrain) மழைநீர் செல்வதற்கு ஏற்றவாறு 10 மீட்டர் இடைவெளியில் மழைநீர் வழிந்தோடும் வாயில்கள் இடத்திற்கேற்றவாறு, பொருத்தப்படுகின்றன. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும் இடங்களில் குறுக்கே மின்சார கம்பிகள் போன்ற சேவைத்துறைகளின் சாதனங்களை கொண்டு செல்ல பி.வி.சி. குழாய்கள் பொருத்தப்படும்.
மண்ணால் அமைந்துள்ள கால்வாய்கள், கரையினை மழைகாலங்களில், தாங்கும் வகையில், தடுப்புச்சுவர் கட்டப்படுகின்றன. மேலும், அது ஒரு சிறந்த தோற்றத்தை கொண்டதாக அமைக்கப்படுகின்றன. தூர்வாரும் பணிகளை செயலாக்க பணியாட்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை கொண்டு செல்ல ஏதுவாக வழித்தட தரைகளும் அமைக்கப்படுகின்றன.
சென்னையில் ஜவர்ஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் பெரிய மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தும் திட்டங்கள் :
சென்னை மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை குறைக்க பொதுப்பணித்துறையுடன் கூட்டாக இணைந்து ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் மாநில அளவிலான திட்ட ஒப்பளிப்பு குழுவினால் ஒப்பளிக்கப்பட்டு அதன் பிறகு இந்திய அரசின், நகர வளர்ச்சி அமைச்சகத்தின், மத்திய ஒப்பளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகரில் மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பிற்கு ஒரு பெருந்திட்டத்தை தயாரிக்க 19.06.2008 காலகட்டத்திலேயே சென்னை மாநகராட்சி மெர்ஸ், ஆர்.வி.அசோசியேட்ஸ் நிறுவனம் மழைநீர் வடிகால்களுக்கான விரிவான திட்டத்தை தயாரித்தனர். அந்த திட்டத்திற்கு மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO) ஒப்பளிப்பு வழங்கியது.
நில அமைப்பு தொடர்பான கள ஆய்வு மற்றும் அதன் விவரங்களின் பகுப்பாய்வு ஆகியவைகளின் அடிப்படையில் மாநகரம் 4 வடிநிலப் பகுதிகளாகவும் அதாவது வடக்கு வடிநிலப்பகுதி, மத்திய வடிநிலப்பகுதி, கிழக்கு நிலப்பகுதி மற்றும் தெற்கு வடிநிலப்பகுதி மற்றும் 12 முக்கிய நீர்தேக்கப்பகுதிகளாகவும், பிரிக்கப்பட்டு பணிகள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் பெரிய மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கான நிதியின் கீழ் செயலாக்கக்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தில் 345 கி.மீ நீளத்திற்கு ரூ.640 கோடியில் JnNURM நிதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்க
சென்னை மாநகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்கும் உட்படக்கூடியது. விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகரத்தில் ஒருங்கணைந்த மழைநீர் வடிகால்கள் இருந்தாலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் நான்கு நதிகளின் வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் இல்லை. எனவே, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை கட்டுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்தது.
திருவாளர்கள். டெட்ராக் என்ற நீரியல் கலந்தறிவாளர்கள், 2011ல் மழைநீர் வடிகால் கட்டமைப்பினை உருவாக்க நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் 2012ல், அனைத்து விரிவாக்கப் பகுதிகளிலும் மழைநீர் வடிகால் கட்டமைப்பினை உருவாக்க ஒரு பெருந்திட்டத்தினை கீழ் வரும் வடிநிலப் பகுதிகளுக்கு வடிவமைத்து அளித்தனர்.
- அடையாறு வடிநிலப் பகுதி
- கூவம் வடிநிலப் பகுதி
- கோவளம் வடிநிலப்பகுதி
- கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி
|
அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதி :
முதல் கட்டமாக, ரூ.1101.43 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளின் பணிகள் தமிழ்நாடு நீடித்த நிலையான நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியுடன் செயலாக்கப்பட உத்தேசிக்கப்பட்டது. இதில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகளுக்கான 35 சிப்பங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் தீர்வு செய்யப்பட்டு 326 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது 220 கி.மீ, நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் செயலாக்கப்படுகின்றன. எஞ்சிய 4 சிப்பங்களான நொளம்பூர், நந்தம்பாக்கம், அம்பத்தூர்-சிட்கோ, மற்றும் பாடிக்குப்பம் கால்வாய் பகுதிகளில் பணிகளை செயலாக்க உலக வங்கியிடமிருந்து தடையின்மை சான்று கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளிகள் அழைக்கப்படும்.
ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்களை அமைக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிலையான கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பணிகளுக்கு நிதி வழங்கும் அமைப்புகளுடன் உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. |
கோவளம் வடிநிலப்பகுதி :
கோவளம் வடிநிலப்பகுதிக்கான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் திட்டத்தினைப் பொருத்தவரையில் (எம்.1, எம்.2 மற்றும் எம்.3 திட்டக்கூறுகள்), ஜெர்மன் வளர்ச்சி வங்கி (கே.எப்.டபிள்யூ) ரூ.1243.45 கோடி மதிப்பில் 360 கி.மீ, வடிகால்களை கட்டும் இந்த திட்டத்தை செயலாக்க நிதி ஆதாரங்களை வழங்கும் நிறுவனமாக இனம் காணப்பட்டுள்ளது. கே.எப்.டபிள்யூ, வங்கி எம்.3 திட்டக்கூறுக்கான விரிவான திட்ட அறிக்கையினை திருத்தம் செய்ய மெசர்ஸ்.காக்ஸ் கன்ஸல்ட்ட்ண்ட் என்ற கலந்தறிவாளர்களை நியமனம் செய்துள்ளது. திருத்திய விரிவான திட்ட அறிக்கை இறுதியாக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளது. எம்.1 மற்றும் எம்.2 திட்டக்கூறுக்கு விரிவான திட்ட அறிக்கையினை சீராய்வு செய்ய கலந்தறிவாளர்களை நியமனம் செய்ய கே.எப்.டபிள்யூ வங்கி ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. |
கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி :
கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிக்கான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் திட்டத்தினைப் பொருத்தவரையில் ரூ.1881.66 கோடி மதிப்பில் 429 கி.மீ. வடிகால்களை கட்டும் திட்டத்தை செயலாக்க, ஜப்பான் இண்டர்நேஷனல் கோஆப்ரேஷன் ஏஜன்சி(JICA), நிதி ஆதாரங்களை வழங்கும் நிறுவனமாக இனம் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திருத்திய விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கலந்தறிளர்களை நியமனம் செய்துள்ளது.
|
பராமரிப்பு பணிகள் :
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி :
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி அந்தந்த மண்டலங்களினால் செயலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணி சுழற்சிமுறையில் ஆண்டிற்கு இரண்டு முறை செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பணி, துறையின் தூர்வாரும் பணியாளர்கள் மூலம் அல்லது ஒப்பந்ததாரர்களின் பணியாட்களின் மூலம், வருடம் முழுவதும், வார கால அட்டவணை பட்டியலிடப்பட்டு அதன்படி, செயலாக்கப்படுகிறது. இதில் அகற்றப்படும் தூர், உடனடியாக துறை வாகனங்களின் மூலமாக இதற்கென குறித்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. மழைநீர் உட்செல்ல உள்ள வழிகள் மற்றும் குழாய்கள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகின்றன,
சில மழைநீர் வடிகால்கள் மக்கள்தொகை நெருக்கமாக உள்ள பகுதிகள் மற்றும் வணிகப்பகுதிகள் வழியாகவும் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் கலக்கும் கால்வாய்களாகவும் செல்கின்றன. அது போன்ற இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வாக, பெருநகர சென்னை மாநகராட்சி. கழிவுநீர் கலக்கும் மழைநீர் வடிகால்களிலிருந்து தூர்வார, உயர்திறன் கொண்ட உறிஞ்சும் இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளது. |
கால்வாய்களை தூர்வாருதல்:
திறந்தவெளி கால்வாய்களில் தூர்வாரவும் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் கழிவுகளை அகற்றவும் மற்றும் தூர்வாரவும் ரோபாட்டிக் இயந்திரம் மற்றும் நீரிலும் மற்றும் நிலத்திலும் இயங்கும் (AMPHIBIAN) புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
நீரிலும் நிலத்திலும்செல்லும் இயந்திரம்:
நீர்வழித்தடங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவும், தூர் அள்ளி சுத்தப்படுத்தவும் நீரிலும் மற்றும் நிலத்திலும் இயங்கும் நவீன இயந்திரம் (Amphibian machine) ஒன்று பின்லாந்து நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பக்கிங்காம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், மற்றும் அடையாறு ஆகியவைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது,
- கேப்டன் காட்டன் கால்வாயிலிருந்து இது வரையில் 89,270 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஆகாயத்தாமரைகளும் மற்றும் தூரும் தோராயமாக 24,732 கன மீட்டர் அளவிற்கு அகற்றப்பட்டுள்ளது.
- பக்கிங்காம் கால்வாயிலிருந்து இது வரையில் 1,44,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஆகாயத்தாமரைகளும் மற்றும் தூரும் தோராயமாக 29,250 கன மீட்டர் அளவிற்கு அகற்றப்பட்டுள்ளது.
- அடையாறு ஆற்றிலிருந்து இது வரையில் 10,080 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஆகாயத்தாமரைகளும் மற்றும் தூரும் தோராயமாக 5,400 கன மீட்டர் அளவிற்கு அகற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை மாநகரில், குறிப்பாக ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், மைலாப்பூர் மற்றும் பிற பகுதிகளில் கொசுத் தொல்லை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கால்வாயில் ஆழம் அதிகரித்து நீர் விரைந்து செல்ல ஏதுவாக உள்ளது. |
ரோபாட்டிக்மண்தோண்டும்இயந்திரம்:
குறைந்த அகலம் கொண்ட சிறிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை செயலாக்க, நவீன ரோபாட்டிக் மண் தோண்டும் இயந்திரங்கள் (Robotic Excavators) சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது நீரோட்டம் உள்ள கால்வாய்களிலும் நீர் மற்றும் சகதியின் மட்டம் 8 அடி வரை இருந்தாலும் பணி செய்யக்கூடியது.
முதல் இயந்திரத்தின் செயல்பாடு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களினால் 06.03.2017 அன்று எம்.ஜி,ஆர். கால்வாயில் துவக்கி வைக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து 30 கால்வாய்களிலும் முறையான கால இடைவெளியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை எம்.ஜி.ஆர். கால்வாய், மாம்பலம் கால்வாய், ரெட்டிக்குப்பம் கால்வாய் ஆகிய கால்வாய்களிலிருந்து 4000 மீட்டர் நீளத்திற்கு சுமார் 14,000 கன மீட்டர் அளவில் தூர் அகற்றப்பட்டுள்ளது.
|
பெருநகர சென்னை மாநகராட்சியினால் பராமரிக்கப்படுமகால்வாய்கள்
|
வரிசை எண். |
மண்டலம் எண். |
கால்வாயின் பெயர் |
விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி |
1. |
1. |
தாமரைக்குளம் கால்வாய் |
2 |
2 |
பழைய நாபாளயம் கால்வாய் |
3 |
3 |
துளசி நகர் கால்வாய் |
4 |
2 |
மணலிபுதூர் டி.என். ஹச்.பி. கால்வாய் |
5 |
2 |
பெரிய ஈச்சங்குழி கால்வாய் |
6 |
2 |
கடப்பாக்கம் கால்வாய் உபரி நீர் கால்வாய் |
7 |
2 |
மாதவரம்-மணலி ஏரி கால்வாய் |
8 |
7 & 9 |
நொளம்பூர் கால்வாய் |
9 |
7 |
அம்பத்தூர் சிட்கோ கால்வாய் |
10 |
7 |
பாடிக்குப்பம் கால்வாய் |
11 |
11 & 12 |
நந்தம்பாக்கம் கால்வாய் |
12 |
12 |
ஆதம்பாக்கம் கால்வாய் |
13 |
14 |
பள்ளிக்கரணை கால்வாய் |
14 |
15 |
செக்ரடேரியட் காலனி கால்வாய் |
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி பகுதி |
15 |
4 |
கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் லிங்க் இணைப்பு கால்வாய் |
16 |
4 |
கொடுங்கையூர் கால்வாய் |
17 |
4 |
வியாசர்பாடி கால்வாய் |
18 |
4 |
ஜவஹர் கால்வாய் |
19 |
6 |
ஏகாங்கிபுரம் கால்வாய் |
20 |
6 |
டி.வி.எஸ்.கால்வாய் |
21 |
9 |
நுங்கம்பாக்கம் கால்வாய் |
23 |
9,10 & 13 |
மாம்பலம் கால்வாய் |
24 |
9 |
நந்தனம் கால்வாய் |
25 |
10 |
ரெட்டிக்குப்பம் கால்வாய் |
26 |
10 |
எம்.ஜி.ஆர். கால்வாய் |
27 |
10 |
ஜாபர்கான் பேட்டை கால்வாய் |
28 |
13 |
செல்லம்மாள் கல்லூரி கால்வாய் |
29 |
13 |
கிண்டி தொழிற்பேட்டை கால்வாய் |
30 |
13 |
ராஜ்பவன் கால்வாய் |
|
1) ரோபாட்டிக் இயந்திரம்
எம்.ஜி.ஆர். கால்வாயில் ரோபாட்டிக் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியினை மேற்கொள்ளுதல்

|
|
வியாசார்பாடி லிங்க் கால்வாயில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கோட்டம் 36, மண்டலம் 4ல் ரோபாட்டிக் இயந்திரம் இயங்குதல்.

|
மண்டலம் 4, கோட்டம் 35 கொடுங்கையூர் கால்வாயில் வலையினால் வேலி அமைக்கும் பணி

|
மாம்பலம் கால்வாயில் ரோபாட்டிக் இயந்திரம் மூலம் பணி செயலாக்கப்படுதல்

|
|
2) நீரிலும் நிலத்திலும் இயங்கும் இயந்திரம்
கேப்டன் காட்டன் கால்வாய் – நீரிலும் நிலத்திலும் இயங்கும் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றப்படுவதற்கு முன்னரும் அகற்றியின்னரும்.

|
வடக்கு பக்கிங்ஹாம் கால்வாயில் நீரிலும் நிலத்திலும் இயங்கும் இயந்திரம் மூலம் பணியினை செயலாக்குதல்

|
நீடித்த நிலையான நீர் பாதுகாப்பு திட்டம்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகருக்கு ரூ.5.00 கோடி திட்ட மதிப்பீட்டில் “நீடித்த நிலையான நீர் பாதுகாப்பு திட்டத்தினை அறிவித்துள்ளார்கள்”. அரசாணை (நிலை) எண்.179, நாள்.08.12.2015ல், சென்னை பெருநகர வளாச்சி திட்டத்தின் நிதியில் இந்த திட்டம் செயலாக்கப்பட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வளாக மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்யும் வசதிகளை ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், கோவில் குளங்கள், ஏரிகள் மற்றும் தடாகங்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
|
வளாக மழைநீர் சேகரிப்பு திட்டம் :
2015-2016–ல், 6 இடங்களில் வளாக மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் ரூ.19.40 இலட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்களிலிருந்து இரண்டு கோவில் குளங்கள் மற்றும் இரண்டு பூங்காக்களில் மழைநீரை சேகரிக்க கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
|
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் :
ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் திட்டத்தின் கீழ், பூங்காக்கள், திறந்தவெளி நிலங்கள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் இன்ன பிற இடங்களில் கீழ் நிலை கிணறு போன்ற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், அமைக்கப்பட்டு வருகின்றன.
|
கோவில் குளங்கள் :
2016-17ல், 32 ஏரிகள்/ குளங்களை புனரமைக்கும் பணி மற்றும் 17 கோவில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க கலந்தறிவாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அந்த பணி முன்னேற்றத்தில் உள்ளது.
வில்லிவாக்கம் குளத்திற்கு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க தமிழ்நாடு நகர்புற நிதி சேவை நிறுவனத்தினால் மெசர்ஸ், இன்மாஸ் கன்சல்டன்ஸி பிரைவேட் லிமிட்டட் என்ற கலந்தறிவாளர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி ஏற்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையின் கூடிய விரைவில் சமர்ப்பிப்பதாக கலந்தறிவாளர்கள் கூறியுள்ளனார். |
|
|
|
|
|
|