முகப்பு>>துறைகள்>> வருவாய்

துறை

வருவாய்த் துறை:

           வருவாய்த் துறையானது பெருநகர  சென்னை மாநகராட்சி யில் உள்ள துறைகளில் மிக முக்கியமான துறையாகும். ஆரம்பம் முதலே பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு சொத்துவரி மூலம் முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக இத்துறை உள்ளது. சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாவதால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி வசூல் ஏறுமுகமாகவே அமைகிறது. சொத்துவரி வசூல் பணியுடன், தேர்தல்கள்(நாடாளுமன்ற/சட்டமன்ற/உள்ளாட்சி அமைப்பு) தொடர்பான பணிகளையும், வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரித்தல் பணிகளிலும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணிகளிலும் உதவி புரிகிறது.   புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயங்களில் இத்துறை உதவிபுரிகிறது.

            சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.98 முதல் 109 வரையில் வழங்கப்பட்டுள்ள வழிவகையின்படியும், அட்டவணை-4ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியும் இத்துறையின் செயல்பாடுகள் அமைகின்றன.

கீழ்கண்ட இனங்கள் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது

  • சொத்துவரி
  • தொழில் வரி
  • மர வரி
  • கம்பெனி வரி
  • விளம்பர வரி
  • தொழில் உரிமம்
  • பல்வகை

இத்துறையின் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

1 வருவாய் அலுவலர 01
2 கூடுதல் வருவாய் அலுவலர்கள 02
3 உதவி வருவாய் அலுவலர்கள்  29
4 வரிமதிப்பீட்டாளர்கள்   85
5 உரிமம் ஆய்வாளர்கள்   50
6 வரி வசூலிப்பாளர்கள்   276

பெருநகர  சென்னை மாநகராட்சி

சொத்துவரி விதிப்பு
வருவாய் துறை

சொத்துவரி விதிக்கும் முறை

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.100ன் படி, நியாய வாடகை மதிப்பின் அடிப்படையில்  அரையாண்டு சொத்துவரி விதிக்கப்படுகிறது.  வாடகை மதிப்பானது, அடிப்படை கட்டணம் மற்றும் பரப்பளவு மற்றும் குடியிருப்பு/குடியிருப்பு அல்லாத பகுதி என்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சொத்துவரி விதிக்கப்படும் முறை :

அடிப்படைக் கட்டணம்X பரப்பளவு  X 135%

சலுகை விவரம்

தற்காலிக கூரையெனில், 20 விழுக்காடு கழிவும், உரிமையாளரால் கட்டடங்கள் பயன்படுத்தப்படின் 25 விழுக்காடும் கழிவு அளிக்கப்படுகிறது.

சிறப்பு வகை கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கும் முறை

வரிசை

எண

 

வகை

முறை

1

  நர்சிங் ஹோம்/

மருத்துவமனை  

அறைகளுக்கான விலை அட்டவணையினை கணக்கில்கொண்டு மொத்த ஆண்டு வருமானத்தில் 13.5 விழுக்காடு சொத்துவரி விதிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், குடியிருப்பு அல்லாத பகுதிகள் இருப்பின் அதனையும் கணக்கில் கொண்டு சொத்துவரி விதிக்கப்படுகிறது.

2

நட்சத்திர ஓட்டல்கள்/

தங்கும் விடுதிகள்       

அரசு ஆணை எண்.855, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நாள் 19.04.1972ன்படி, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, அவற்றின் வகைப்பாடு மற்றும் வசூலிக்கும் வாடகைத் தொகை அடிப்படையில் சொத்துவரி விதிக்கப்படுகிறது.

3

திரை அரங்குகள்   

  இருக்கைகளின் எண்ணிக்கை மற்றும் டிக்கெட் விலை, திரையரங்கின் வகைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டு வாடகைத் தொகை கணக்கிடப்பட்டு, சொத்துவரி விதிக்கப்படுகிறது.

4

கல்யாண மண்டபங்கள்   

ஒவ்வொரு வகையான கல்யாண மண்டபங்களுக்கும், ஒவ்வொரு மாதிரியாக கணக்கீடு செய்யும் நடைமுறையினை மாற்றி ஒரே மாதிரியான முறையினைக் கொண்டுவந்து. இவ்வகையான கட்டடங்களுக்கு சொத்துவரி விதிப்பினை எளிமைப்படுத்திட, அனைத்துவகையான கல்யாண மண்டபங்களில் நடத்தப்படும் விழாக்கள் 50 என்ற ஒரே மாதிரியான கணக்கினை எடுத்துக்கொண்டு சொத்துவரி விதிப்பினை மேற்கொள்ளவும்,    2/2009-10 அரையாண்டிலிருந்து கல்யாண மண்டபங்களுக்கான கட்டடங்களுக்கு புதியதாக சொத்துவரி விதிக்கப்படும் நிகழ்வுகளுக்கு, மேற்படி ஒரே மாதிரியான கணக்கீட்டு முறையில் சொத்துவரியினை விதித்திடவும் பெருநகர  சென்னை மாநகராட்சி மன்றத் தீர்மானம் எண்.454/2009, நாள் 30.11.2009ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின்படி சொத்துவரி விதிக்கப்படுகிறது.