தொழில் உரிமம்
:
எளிமையான முறையில் தொழில் உரிமம் பெறுதல்
வியாபாரிகளுக்கு தொழில் உரிமம் வழங்கும் நிகழ்வில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட கடுமையான முறையை மாற்றியமைத்து, மிகவும் எளிமையாக்கப்பட்டு, தொழில் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தங்களது பெயர், தொழில் விவரம், தொழில் நடத்துமிடத்தின் முகவரி, ரூ.20/= முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்கான உறுதி மொழி ஆகிவற்றினை அளித்தால், விரைவில் தொழில் உரிமம் வழங்கப்படும்.
சொத்துவரி செலுத்தல் :
பெருநகர சென்னை மாநகராட்சி யானது கீழ்க்கண்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது
அ) சொத்துவரி பெயர் மாற்றம்
ஆ) உட்பிரிவு பெயர் மாற்றம்
இ) தொழில் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம்.
மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களைக் கணிணி வழியாக விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே இன்ட்டர்நெட் மூலம் இலவசமாக பெற்றிடவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரையாண்டு துவக்கத்தின் 15 நாட்களுக்குள் சொத்துவரியினை செலுத்திட வேண்டும். சொத்துவரியினை இணைய தளத்தின் மூலமாகவோ, மண்டல அலுவலகத்தில் உள்ள கணிணி மையங்கள் மூலமாகவோ, வரி வசூலிப்பாளர் மூலமாகவோ பெருநகர சென்னை மாநகராட்சி க்கு செலுத்திடலாம்.
வருவாய் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலை வாயிலாகவோ அல்லது கேட்பு காசோலை வாயிலாகவோ சொத்துவரியினை செலுத்திடலாம்.
|