முகப்பு>> துறை>>மருத்துவ சேவைகள்துறை

துறைகள்

மருத்துவ சேவைகள்துறை
                1917 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் கீழ் தாய் மற்றும் குழந்தை நலத்துறை நிறுவப்பட்டது.  1956 ஆம் ஆண்டு களப்பணியாளர்களுடன் குடும்பத்தை திட்டமிடல் எனும் திட்டம் தொடங்கப்பட்டது.  மேலும் 10.02.1967ம் தேதி முதல் இத்திட்டமானது குடும்பநல திட்ட துறையாக மறு சீறாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  பின்னர் 10.02.1988 ஆம் தேதி முதல் ஐந்தாவது இந்திய மக்கள் தொகை திட்டத்தின் கீழ் சென்னை நகர மக்களுக்கு தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் துறை மற்றும் குடும்ப நல சேவைகள் துறை ஆகியவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.  ஐந்தாவது இந்திய மக்கள் தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்பட்டு வந்த 4 குடும்ப நல அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் மேலும் 10 குடும்ப நல அறுவை சிகிச்சை அரங்குகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
                1995 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகப்பேறு மருத்துவமனைகளில் சாதாரண பிரசவங்கள் மட்டும் நடைபெற்றன.  1995 ஆம் ஆண்டில் அனைத்து கருத்தடை அறுவை சிகிச்சை அரங்குகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.  பின்னர் 2003ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை மற்றும் பெருமாள்பேட்டை ஆகிய மக்பேறு மருத்துவமனைகளை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட அவசர மகப்பேறியல் சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டு அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அவசர அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள், குடும்பநல அறுவைசிகிச்சைகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  2009 ஆம் ஆண்டு மேலும் 8 கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர மகப்பேறியல் சிகிச்சை அரங்கங்களாக மேம்படுத்தப்பட்டன.
                2012 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரில் திருவெற்றியூர், மாதாவரம், அம்பத்தூர், ஆலந்தூர், ஆகிய பகுதிகளை அந்தந்த பேருராட்சிகளில் இருந்து பெறப்பட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டன.  சென்னை மாநகராட்சியின் முந்தைய 10 மண்டலங்களில் பகுதிகளை 7 மண்டலங்களாக மாற்றப்பட்டு அத்துடன் பேருராட்சிகளில் இருந்து பெறப்பட்ட புதிய 4 மண்டலங்களையும் சேர்க்கப்பட்டன.  2013 ஆம் ஆண்டு மேலும் 4 புதிய மண்டலங்கள் அதாவது மணலி, வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதி அரசு பொது சுகாதார இயக்ககத்தில் இருந்து பெறப்பட்டன.

                தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் பொது சுகாதார துறை மற்றும் குடும்பநலத்துறை ஆகியவை ஒரே கூறையின் கீழ் இணைக்கப்பட்டு விரிவான சுகாதார பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் கீழ் 140 ஆரம்ப நகர சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நகர சமுதாய நல மையம் என்ற விதத்தில் (பெருங்குடி மண்டலம் நீங்கலாக) 14 நகர சமுதாய நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  அதனை தவிர்த்து அறுவை சிகிச்சை அரங்கங்கள் கூடிய மூன்று 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் (சைதாப்பேட்டை, செனாய் நகர் மற்றும் பெருமாள்பேட்டை) செயல்பட்டு வருகின்றன.  மேலும் அறுவை சிகிச்சை அரங்கங்கள் இல்லாத மூன்று 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் (மணலி புதிய டவுன், துரைப்பாக்கம் மற்றும் முகலிவாக்கம்) செயல்பட்டு வருகின்றன.
நகர ஆரம்ப சுகாதார மையங்களில் அளிக்கப்படும் சேவைகள்

1.எல்லா வயதினருக்கும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளித்தல்

தொற்றா நோயற்ற நோய்

1.பெரியவர்களுக்கு தொற்றா நோயற்ற நோய்களாக நீரிழிவு, உயர் இரத்தஅழுத்தம், கருப்பைவாய் மற்றும் மார்பக புற்று நோய் ஆகியவைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல். 
2.அனைத்துவகை காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளித்தல் (மலேரியா, டெங்கு, பன்றி காய்ச்சல், டைபாய்ட்).

தாய் பராமரிப்பு
1. மகப்பேறுக்கான ஆரம்பக்கால பதிவு, கர்ப்பகால கவனிப்பு, பிரசவித்த தாய்மார்களை  கண்கானித்தல்
2 . உயர்நிலை ஆபத்தான கர்ப்பநிலையில் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே
  கண்டறிதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைக்கு
  பரிந்துறைக்கப்படுவது, பிரசவித்த தாய்மார்களை கண்கானித்தல்,  பிரசவித்தப்பின்
  குடும்பநல சிகிச்சை முறைகளை விளக்கி அதற்கான ஏற்பாடுகளை செய்வது.

குழந்தை பராமரிப்பு
1. தேசிய தடுப்பு மருந்துகள், குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு, ஆரம்ப நிலையிலேயே வளர்ச்சி தாமதமாக உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து    
  மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுதல்
2. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை
3 . கருவுற்ற தாய்மார்களுக்கும், மகளிருக்கான சிறியவகை நோய்களுக்கும்   
அல்ட்ராசோனோகிராம் பரிசோதனை(ஸ்கேன்) 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுகாதார திட்டம்
2. வளர்இளம் பருவத்தினருக்கு சுகாதார திட்டம் (வாரந்தோறும் இரும்புச்சத்து, ஃபோலிக்   அமில மாத்திரைகள் வழங்குதல்) 1. அரசு சிறப்பு திட்டங்கள், போலியோ சொட்டு மருந்து முகாம், தேசிய குடற்புழு   நீக்கநாள், உலக மக்கள் தொகை தின நாள், குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்   போக்கு முகாம் இருவாரங்கள் நடத்துவது, உலக தாய்பால் தின நாள்,     வைட்டமின்-ஏ முகாம், இந்திரா தனுஷ் தடுப்பூசி முகாம், சிறப்பு தாய் சேய்நல     முகாம்கள், டெங்கு காய்ச்சருக்கான விழிப்புணர்வு முகாம்,  தட்டம்மை மற்றும்   ரூபெல்லா தடுப்பூசி முகாம்.
1. போலியோ மற்றும் தட்டம்மை நோய்களுக்கான கண்காணிப்பு
2. திருத்தப்பட்ட தேசிய காசநோய்கட்டுபாடு திட்டம் பரிசோதனை மற்றும் சிகிச்சை
3. விழிப்புணர்வு:தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம், கொசு உற்பத்தியாகும் இடங்களை   கண்டறிந்து அவற்றை நீக்குதல் மற்றும் சத்துணவு.

கர்ப்பகால முன் கவனிப்பு சேவைகள்

1.கர்ப்பகால பதிவு மற்றும் கர்ப்பகால கவணிப்பு.

 
அல்ட்ராசோனோகிராம்
            அனைத்து நகர ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால் அல்ட்ராசோனோகிராம் இலவசமாக செய்யப்படுகிறது.




ஆய்வக பரிசோதனை
              கர்ப்பகால முன் கவனிப்பு, நீரிழிவு நோய் இரத்தக்கொதிப்பு ஆகியவைகளுக்கு ஆய்வக பரிசோதனை செய்தல்.

கருப்பைவாய்புற்றுநோய்ஆரம்பநிலையில்கண்டறிதல்
              பெண்களுக்கு எளிய முறையில் கருப்பைவாய் புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை சென்னை மாநகராட்சியில் அனைத்து நகர நலவாழ்வு நிலையங்களிலும் தற்போது செய்யப்படுகிறது.


குழந்தை பராமரிப்பு சேவைகள்
                தேசிய தடுப்பூசி நோய்தடுப்பு அட்டவணையின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப நகர சுகாதார மையங்களிலும் மற்றும் களப்பணியின் போதும் இலவசமாக நோய் தடுப்பூசி போடுதல்.


தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டம் (அரசு சிறப்பு திட்டம்)
                1995 ஆம் ஆண்டு முதல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது.  இத்திட்டத்தின் செயல்பாட்டினால் 1999 முதல் சென்னையில் போலியோ நோய் ஏற்படவில்லை.  பிப்ரவரி 2014ல் உலக சுகாதார நிறுவனம் போலியோ நோய் இல்லா சான்றிதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

களப்பணி சேவைகள்
                நகர நலவாழ்வு நிலையங்களில் பணிபுரியும் களப்பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று கர்ப்பிணித் தாய்மார்களை பதிவு செய்தல், தடுப்பூசி போடுதல், பிரசவித்த தாய்மார்களை கண்காணித்தல் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு இரும்பு சத்து மாத்திரைகளை வழங்குவதன் மூலம் இரத்தசோகையை தடுத்தல், தற்காலிக முறைகளை அனுசரிக்கும் தாய்மார்களுக்கு ஓரல்பில், காண்டம் வழங்குதல், குடும்ப நல முறைகள் பற்றி நலக்கல்வி அளித்தல்.



நகர சமுதாய நல மருத்துவமனைகளில் கீழ்கண்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
                எல்லா வயதினருக்கும் சிறுசிறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளித்தல்

தொற்றா நோயற்ற நோய்
                பெரியவர்களுக்கு தொற்றா நோயற்ற நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கருப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் ஆகியவைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
2.அனைத்துவகை காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளித்தல் (மலேரியா, டெங்கு,       பன்றி காய்ச்சல், டைபாய்ட்).

தாய் சேய் நலம் பாதுகாப்பு
                1.ஆரம்ப கர்ப்பகால கவனிப்பு,

                2.உயர்நிலை ஆபத்தான கர்ப்பநிலையில் உள்ளவர்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் தேவையான மருத்துவமனைக்கு பரிந்துரைப்பது.

சோனோமேமோகிராம்(Sono-mamogram)
          மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய 5 இருபத்து நான்கு மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளில் சோனோமேமோகிராம் கருவி பயன்பாட்டில் உள்ளது.
அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.

பிரசவ சேவைகள்
               24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பிரசவ சேவைகள் முழு நேரமும் (24x7) நடைபெற்றுவருகின்றன. சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரவங்கள் மகப்பேரியல் \ வருகின்றன.  பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்காக பிரசவ அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.  ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிரசவத்திற்கான சாதனங்கள் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரசவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  CTG Machie மூலம் சிசுவின் இருதயத் துடிப்பு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது.  தேவை இருப்பின் சுகப்பிரசவத்தின்போது Forceps and Vacuum extraction முறையிலும் பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.

தீவிர சிசு கண்காணிப்பு பிரிவுகள்
            12 இருபத்தி நான்கு மணி நேர அவசர மகப்பேறு மருத்துவ மனைகளில் சிசு சீராக்கும் பிரிவுகள் அமைக்கப்பட்டு இயங்கப்பட்டு வருகின்றன.  இப்பிரிவில் பிறந்த குழந்தைகளின் நிலையானது சீர்படுத்தும் முறை நடைபெறுகின்றன.


பரிசுப்பெட்டகம் (Amma Baby Care Kit)
            பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கொசுவலையுடன் கூடிய கதகதப்பு மெத்தை மற்றும் குழந்தைக்கு ஆடை, டவல், சோப், பவுடர், உள்ளடங்கிய பரிசுப்பெட்டகம் வழங்கப்படுகிறது.

குடும்ப நல சேவைகள்:

தற்காலிக முறைகள்
            தகுதிவாய்ந்த தம்பதியர்களுக்கு தற்காலிக குடும்ப நல முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பயன்பாட்டினை தெரியப்படுத்துதல்.  வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை, கருத்தடை வளையம் பொருத்துதல், பிரசவித்தபின் காப்பர்-டி வளையம் பொருத்துதல், ஆண்களுக்கான நிரோத் வழங்குதல் ஆகியவை அனைத்து ஆரம்ப நகர சுகாதார மையங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நிரந்தர குடும்ப நல முறைகள்
            பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின் (Puerperal Sterilization) எனம் குடும்பநல கருத்தடை அறுவைசிகிச்சையும், மாதவிலக்கு காலங்களில் இடைப்பட்ட நிலையில்        Non- Puerperal Sterilization, Laprascopic Sterilization, எனும் கருத்தடை அறுவை சிகிச்சையும், MTP எனும் மருத்துவ கருக்கலைப்பு செய்த பின்பும் பெண்களுக்கான நிரந்தர அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.  ஆண்களுக்கு (Non Scalpal Vasectomy) நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


 
                ஒவ்வொரு அறுவை அரங்கமும் நவீன மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன மேலும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் சுகப்பிரசவ அறைக்கும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இரத்தச் சேமிப்பு
            இரண்டு இரத்தச் சேமிப்பு கிடங்கு சைதாப்பேட்டை மற்றும் பெருமாள்பேட்டை 24 மணி நேர அவசர மகப்பேறு மருத்துவமனையில் இயங்கி வருகின்றன.



பாதுகாப்பான கருக்கலைப்பு
                அனைத்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனைகளில் பாதுகாப்பான முறைகளில் தாய்மார்களுக்கு மருத்துவ கருக்கலைப்பு செய்யப்படுகின்றன.
மகளிருக்கான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

சத்தான உணவு
           பிரசவித்த தாய்மார்களுக்கு அவர்கள் மருத்துவமனையில் உள்நோயளியாக
  இருக்கும்வரை இலவசமாக சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது,  மேலும்
  அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.