குழந்தைகளின் கல்விப்புரட்சி- உச்சி மாநாடு
பிப்ரவரி 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் மும்மையில், குழந்தைகளின் கல்விப்புரட்சி என்கிற தலைப்பில் இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக குழந்தைகளே தலைமையேற்று ஒரு கல்வி மாநாட்டினை நடத்திக் காட்டியுள்ளனர். Teach for India என்கிற அரசு சாரா நிறுவனம் இம்மாநாட்டினை வடிவமைத்துள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவ, மாணவியரில் மூவர் நம் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயில்கின்றனர். அம்மூவரில், விசாலாட்சி.G மற்றும் ப்ரீதா.M ஆகிய இருவரும் சைதை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். பூஜா.S புலியூர் தொடக்கப்பள்ளி மாணவி. இந்திய கல்வியாளர்கள் சுமார் 500 பேருடன் சிறப்பாக கலந்துரையாடி கல்விமுறையை மறு கற்பனை செய்து பார்க்கத் தூண்டியுள்ளனர் நம் இளைய தலைமுறை மாணவ, மாணவியர்.
|