Home>>  Departments>>  Education

Education Department

சென்னை பள்ளி மாணவ / மாணவிகளுக்கு உண்டு , உறைவிட வசதியுடன் NEET, JEE  நுழைவு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்

 

பெருநகர  சென்னை  மாநகராட்சி. கல்வித்துறையின்  கீழ்  இயங்கும்  பள்ளிகளில் மாணவர் முன்னேற்றத்தில்  குறிப்பிடத்தக்க  செயல்பாடாக,  இரண்டு  உண்டு   உறைவிடப்பள்ளிகள் கீழ்க்கண்ட ஏற்படுத்தப்பட்டு  கடந்த  இரண்டு  ஆண்டுகளாக  சிறப்பாக  நடைபெற்று  வருகிறது.

  • சென்னை  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  சுப்பராயன்  தெரு பள்ளியில் ஆண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி.
  • சென்னை  பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  சைதாப்பேட்டை பள்ளியில் பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளி.
  • சென்ற  ஆண்டு  SPARK PROGRAM  என்ற  திட்டத்தின்  வாயிலாக சென்னை  மாநகராட்சி   கட்டுப்பாட்டில்  உள்ள 70  பள்ளிகளில் இருந்து 25  மாணவர்களும், 45 மாணவிகளும்  தேர்ந்தெடுக்கப்பட்டு  பள்ளிப்பாடத்திலிருந்துஅவர்களுக்கு சிறப்புப்பயிற்சி  அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின்  வாயிலாக மாணவ,  மாணவிகளுடைய ஒட்டு  மொத்த அடைவுத்திறன்  அதிகரிக்கப்பட்டது.
  • இக்கல்வியாண்டில்  மாணவர்கள்  சிறந்த பொறியியல்  கல்லூரிகளிலும் மற்றும்  மருத்துவ  கல்லூரிகளிலும் சேரும் விதமாக 60  மாணவர்கள்  மற்றும் 60 மாணவியர்  திறனறிவுத்  தேர்வின்  வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இம்மாணவர்களுக்கு NEET  தேர்வுக்கான  பயிற்சியை    தமிழ்வழி  மற்றும்  ஆங்கிலவழியில் 40  மாணவர்களுக்கும், 40  மாணவிகளுக்கும்  மேலும்  20 மாணவர்கள் மற்றும்  20  மாணவிகளுக்கு  JEE  MAIN ENGLISH ஆங்கில வழியில்மட்டும் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளியின்  மூலமாக சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட  உள்ளது.
  • இப்பயிற்சியானது  காலை  5.00 மணி முதல் இரவு 10,00 மணி வர பல்வேறு  செயல்பாடுகளை  உள்ளடக்கி  திட்டமிட்டு  செயல்படுத்தப்பட உள்ளது.காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடத்திட்டத்திலும், சனி மற்றும் விடுமுறை நாட்களில்  NEET  மற்றும் JEE-க்கு சிறப்புப்பயிற்சியாக  FIITJEE  என்ற புகழ்  பெற்ற நிறுவனத்தின் வாயிலாகவும்,  திங்கள் முதல் வெள்ளி  வரை முறைப்படுத்தப்பட்ட  அட்டவணையின்படி  MASTER ACADEMY என்ற நிறுவனத்தின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்பட  உள்ளது.
  • இரண்டு  மையங்களையும்  கல்வித்துறையில்  உள்ள  கல்வி  அலுவலர்,  கூடுதல்  கல்வி  அலுவலர்  மற்றும்  அனைத்து  உதவிக்கல்வி  அலுவலர்களும் சுழற்சி  முறையில் மாணவர்களுடைய அடைவுத்திறன்  மேம்படவும்  மற்றும் NEET, JEE  போட்டித் தேர்வுகளில் வெற்றி  பெறவும் மேற்பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இச்சிறப்பான திட்டத்தினை பெருநகர  சென்னை  மாநகராட்சி, ஆணையர் அவர்கள்  04.01.2018  வியாழக்கிழமையன்று  காலை  11.00 மணியளவில்  சுப்பராயன்  தெரு, சென்னை   மேல்நிலைப்பள்ளியில்  அமைந்துள்ள    உண்டு    உறைவிடப்பள்ளியிலும்  மற்றும் அதே நாளில் பிற்பகல் 3.00  மணியளவில் சென்னை பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் அமைந்துள் உண்டு  உடைவிடப்பள்ளியையும்  தொடங்கி  வைத்தார்.