முகப்பு>> துறைகள் >>கல்வி

கல்வித்துறை

கல்வித்துறையின் வரலாறு

பெருநகர  சென்னை மாநகராட்சி க் கல்வித்துறையானது 1912ஆம் ஆண்டு 40 தொடக்கப்பள்ளிகளோடு தொடங்கப்பெற்று தற்போது 32 மேல்நிலைப்பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு § உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் என 98857 மாணவர் எண்ணிக்கையுடன் 4041 ஆசிரியர்களுடன் செயல்படுகிறது.
பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பள்ளிகள் ஏழை எளிய குறிப்பாக குடிசை வாழ் பகுதியில் உள்ளவர்களின் கல்வித்தேவையினைப் பூர்த்திசெய்து வருகிறது.

இணை ஆணையர் (கல்வி) 1
கல்வி அலுவலர் 1
உதவிக் கல்வி அலுவலர்கள் 5
உதவிக் கல்வி அலுவலர்கள் (பொ) 2

நோக்கங்கள்

  • எழுத்தறிவு
  • இடைநிற்றல் தவிர்த்தல்
  • எல்லோருக்கும் தரமான கல்வி
  • திறன் அடைவு
  • பெண் கல்விக்கு ஊக்கமளித்தல்
  • அனைத்து மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வக வசதிகள்
  • அனைத்துப் பள்ளிகளுக்கும் நூலக வசதி
  • அனைத்து மாணவர்களுக்கும் கணினிக்கல்வி
  • தொடக்க நிலையில் செயல்வழி அடிப்படையிலான கல்வி மூலம் கற்றல் கற்பித்தல்
  • தொடக்க நிலைக்கு மேலுள்ள வகுப்புகளுக்கு செயல்வழி முறை மூலம் கற்றல்
  • நடுநிலை பள்ளிகளில் தொழிற்கல்வி
  • பள்ளி முமு நலக்கல்வித்திட்டம்
  • விளையாட்டில் மேம்பாடு - திறமைகள் வளர்த்தல்

பாடத்திட்டம்

அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. விளையாட்டு, சாரண சாரணியர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சிறார்செஞ்சிலுவை இயக்கம் போன்றவை மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளி முழு நலக்கல்வி திட்டம் ஒரு புதுமையான, முதல் முயற்சியாக வாழ்க்கை திறன்கள், ஆரோக்கியமான வாழ்வு வாழ, சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரோடும் கலந்து பேசவும் தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்ளவும் இவை பயன்படும் என்ற எண்ணத்தோடு அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் மேல்நிலை வகுப்புவரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறுபான்மையினரின் கல்வித்தேவையினை பூர்த்தி செய்ய சில பள்ளிகளில் தெலுங்கு மற்றும் உருது வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
தேர்வுகள்
10, 12 நீங்கலாக மற்ற வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுத்தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுமதி அளித்த பின்னர் வெளியிடப்படுகிறது. XII வகுப்பு முடிவுகளை அந்ததந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி அளித்த பின்னர் வெளியிடப்படுகிறது. X, XII வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் அரசுத் தேர்வு இயக்கம், தமிழ்நாடு அரசு, சென்னை-600 006 மூலம் நடத்தப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளது. சில பள்ளிகளில் தெலுங்கு மற்றும் உருது மொழி சிறுபான்மையினருக்கான பயிற்று மொழியாக உள்ளது.

கட்டண விவரம்.

ஆங்கில வழி மட்டும் (கட்டணம்)
வ.எண பள்ளிகளின் வகை வகுப்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கட்டணம் மற்றவர்கள்
1 தொடக்கப்பள்ளி 1 - 5 NIL NIL
2 நடுநிலைப்பள்ளி 1 - 8 NIL NIL
3. உயர்நிலைப்பள்ளி 6 - 8 NIL NIL
    9 &10 NIL NIL
    11, 12 ( அறிவியல்) NIL NIL
    11, 12 (கணிப்பொறியியல்) 200 200
    11, 12 (கலை) NIL NIL
    11, 12 (கைத்தொழில்) NIL NIL
ஆங்கில வழி மட்டும் (கட்டணம்)
    6 - 8 Nil 200.00
    9 ,10 Nil 250.00
    11, 12 Nil 500.00
 

மாநகராட்சி அளவில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்-2012

     மேற்கண்ட பொதுத்தேர்வில் 797 மாணவர்கள் 400-க்கும்மேல் பெற்றிருக்கிறார்கள்.
மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் 308 மாணவர்கள் 1000-க்கும் மேல் பெற்றிருக்கிறார்கள்.

 

     நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பில் மார்ச் 2012-ல் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.

 

      சென்னைப் பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மார்ச் 2012-ல் பெற்றுள்ளன அவை:

1. சென்னை உயர்நிலைப் பள்ளி, கண்ணம்மாப்பேட்டை
2. சென்னை உயர்நிலைப் பள்ளி, கே.பி.தெரு

கணினி வழிக்கல்வி

அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலும் சில நடுநிலைப் பள்ளிகளிலும் கணினி வழி மற்றும் கணினிக்கல்வி வழங்கப்படுகிறது. கணினிக்கல்வி பயிற்சியானது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலுள்ள 1945 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 884 கணினிகளும் 76 அச்சுப்பொறி கருவிகளும் பெருநகர  சென்னை மாநகராட்சி மூலம் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுள்ளது.

 சிறப்பு நிகழ்வு நடைமுறைப்படுத்துதல் துறை மூலம் 174 மடிக்கணினிகள் 4 சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்குழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி - சமுதாய கல்லூரிகள் மாணவர்களுக்குத் தொழிற்கல்வி பயிற்சிகள்

கல்வித்துறை வழிக்காட்டுதலின்படி, கல்விக்குழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சியானது உருவாக்கப்பட்டது. கல்விக்குழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் மூலம் தற்போது 4 சமுதாயக்கல்லூரிகள் முறையே சுந்தரம் பிள்ளை தெரு, பீமன்னா தோட்டம், நாட்டுப் பிள்ளையார் கோவில்தெரு மற்றும் வீ.ஆர்.பிள்ளை தெரு ஆகிய இடங்களில் நிறுவப்பெற்று எந்த விதமான நன்கொடையோ அல்லது கற்பித்தல் கட்டணமோ அல்லது சிறப்புக்கட்டணமோ வசூலிக்கப்படாமல் சாமானி£ர்வையின் மூலம் தற்போது 4 சமுதாயக்கல்லூரிகள் முறையே சுந்தரம் பிள்ளை தெரு, பீமன்னா தோட்டம், நாட்டுப் பிள்ளையார் கோவில்தெரு மற்றும் வீ.ஆர்.பிள்ளை தெரு ஆகிய இடங்களில் நிறுவப்பெற்று எந்த விதமான நன்கொடையோ அல்லது கற்பித்தல் கட்டணமோ அல்லது சிறப்புக்கட்டணமோ வசூலிக்கப்படாமல் சாமானிய மக்களால் படிக்க இயலாத துறைகளான செவிலியர் படிப்பு, இயந்திரவியல் படிப்பு, கணினி படிப்பு, அடுமனை தொழில்கள் சார்ந்த படிப்பு, அலுவலக நிர்வாகம் போன்றவை கற்பிக்கப்படுகிறது.
மாறிவரும் வேலைவாய்ப்புத் தேவைகளை நினைவில் கொண்டு பெருநகர  சென்னை மாநகராட்சி திருவல்லிக்கேணியிலுள்ள சமுதாயக் கல்லூரியில் 3 மாத கால அளிவில் கற்பிக்க வல்ல மூன்று குறுகிய கால பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை முறையே BPO, Hospitality Services மற்றும் Customer Relations மற்றும் Sales இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமானது தற்போது வளர்ந்து வரும் போட்டி மிக்க வேலை வாய்ப்பு தேவையினை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பயிற்சியானது 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் 105 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. அவர்களில் 90 பேர் பயிற்சினை பெற்றிகரமாக முடித்து தற்போது பிரபல நிறுவனங்களானMC.Donalds. Impetus (Reliance). Arvind Brands (Retail), Smoking Joes, Spencer's Daily, Vodafone, Dish TV, Coffee Day k‰W« Stat City Hotel இவற்றில் ரூபாய் 4000/- சராசரி வருமானம் பெற்று வருகின்றனர்.

பெருநகர  சென்னை மாநகராட்சி த் தொழிற் பயிற்சி நிறுவனம்

    பெருநகர  சென்னை மாநகராட்சி த் தொழிற் பயிற்சி நிறுவனத்தை NCVI அங்கீகாரத்தோடு DGET-/22/-TC தொடங்கியது.

  தேசியக் கவுன்சிலின் கீழ் தொழிற்கல்வி பயிற்சிகள் கீழ்க்காணும்படி நடந்து வருகின்றன.

தொடர்
எண்
பயிற்சியினர் பெயர் கால அளவு இருக்கைகள் ஆண்டு
1 கணிப்பொறி ஆப்ரேட்டர் 1 ஆண்டு 40 2007
2 பிளம்பர் 1 ஆண்டு 42 2008
3 ஃபிட்டர் 2 ஆண்டு 42 2009
4 எலக்ட்ரிஷியன் 2 ஆண்டு 42 2009
5 மோட்டார் மெக்கானிக் 2 ஆண்டு 42 2009
6 எலக்ட்ரானிக் மெக்கானிக் 2 ஆண்டு 42 2011

நலத் திட்டங்கள் (தமிழக அரசால் அளிக்கப்பட்டவை)

  • 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி
  • முதல் வகுப்புவரை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் விலையில்லாப் புத்தகங்கள்
  • அனைத்து சென்னைப் பள்ளிகளிலும் மதிய உணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள்
  • அனைத்து இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்புக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • மற்றும் பயிலும் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • சுகாதார தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • மற்றும் பயிலும் இனத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது
  • அனைத்து மாணவர்களுக்கும் தங்களுடைய வீட்டில் இருந்து பள்ளி வரை சென்று வர விலையில்லா பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

நலத் திட்டங்கள் ( பெருநகர  சென்னை மாநகராட்சி )

  • பெருநகர  சென்னை மாநகராட்சி 2007ஆம் ஆண்டு முதல் XII ஆம் வகுப்புப் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நிதி உதவி வழங்கி வருகிறது.
  • தொழில் சாந்த படிப்புகளான மருத்துவம், பொறியியல் ஆகியவற்றிக்கு வருடத்திற்கு ரூ.25,000/- வழங்குகிறது
  • செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.5000/-வகுப்புப் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நிதி உதவி வழங்கி வருகிறது.
  • தொழில் சாந்த படிப்புகளான மருத்துவம், பொறியியல் ஆகியவற்றிக்கு வருடத்திற்கு ரூ.25,000/- வழங்குகிறது
  • செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.5000/- வழங்குகிறது.
  • மற்ற பட்டப்படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.3000/- வழங்குகிறது.
  • மேற்கூறிய படிப்புகள் அனைத்திற்கும் படிப்பு முடியும் வரை வழங்குகிறது
  • இலவச சீருடை
  • இலவச காலணி (மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு)
  • சானிடரி நாப்கின் (மாணவிகளுக்கு)
  • வடிவியல் பெட்டி (முதல் வகுப்பு வரை)
  • விளையாட்டு ஆடை மற்றும் நிதி உதவி (மாநில மற்றும் மாவட்ட அளிவிலான வெற்றியாள

பெருநகர  சென்னை மாநகராட்சி யில் ஆசிரியர்களுக்கான பரிசுகள்

சென்னை மாநகராடசியில் X மற்றும் XII வகுப்பில் 100/- தேர்ச்சி விழுக்காடு அளித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பணப்பரிசு ரூ.1500 வழங்கப்படுகிறது.

பெருநகர  சென்னை மாநகராட்சி யில் மாணவர்களுக்கான பரிசுகள்

  • விடுப்பு எடுக்காமல் கல்வியாண்டு முழுவதும் வரும் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு சுதந்திர தின விழாவின் கொண்டாட்டத்தின் போது வழங்கப்படுகிறது.
  • மற்றும் X மற்றும் XII வகுப்புகளில் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தலா ரூ.1000/- வழங்கப்படுகிறது.
  • மற்றும் X மற்றும் XII வகுப்புகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.3000/-, ரூ.2500/-, ரூ.2000/- வீதம் வழங்கப்படுகிறது.
  • மற்றும் X மற்றும் XII வகுப்புகளில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் தலா ரூ.1000/- வழங்கப்படுகிறது.

புரட்சித் தலைவர் மதிய உணவுத்திட்டம்

சத்துணவுத்திட்டம் 1982ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் உடல் நலத்துடன் திகழ 5 வயது முதல் 9 வயது மற்றும் 10 முதல் 14 வயது வரை தொடங்கப்பட்டது. 15.09.1984ல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டு இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆதி திராவிட பள்ளிகளுக்கும் பெருநகர  சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

286 பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பள்ளிகளும், 336 அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் 10 ஆதி திராவிட பள்ளிகளும் பெருநகர  சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மண்டலம் (பழையது) பள்ளிகள் பயன்பெறுவோர் எண்ணிக்கை

Zone Schools No. of Beneficiary
I 26 7715
II 28 3213
III 40 7480
IV 27 4470
V 28 6967
VI 29 2664
VII 30 3558
VIII 23 3340
IX 23 3960
X 28 4156
Total 282 47523

உணவுப் பொருட்களின் அளவு

5 - 9 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச தரமான உணவு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அதே தரத்தில் புழுங்கல் அரிசி உணவு வழங்கப்படுகிறது. இலவச மதிய உணவு அரிசி மாணவர்களுக்கு கு.ஊ.ஐ மூலம் வழங்கப்படுகிறது. ஏனைய உணவுப்பொருள்கள் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை - உருளைக்கிழங்கு ஒரு மாணவருக்கு 16 பைசாவில் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை - பச்சைபயறு மற்றும் கொண்டைக்கடலை வழங்கப்படுகிறது. தினமும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது.

வயது அரிசி கிராம் பருப்பு (கிராம்) எண்ணெய் (கிராம்) உப்பு (கிராம்) குறிப்பு
5-9 100 15 3 1.9 ஒவ்வொரு நாளும்
10-14 150 15 3 1.9 ஒவ்வொரு நாளும்
(8ஆம் வகுப்பு முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு 150 15 3 1.9 ஒவ்வொரு நாளும்

 


ஊட்டச் செலவுகள்

காய்கறிகள் மற்றும் இதர உணவுப்பொருட்கள், எரி பொருள்கள் ஆகியவற்றிற்காக ஒரு நாளைக்கு ரூ.0.695 செலவு செய்யப்படுகிறது. (1 முதல் 5 வரை) மற்றும் (6 முதல் 10ஆம் வகுப்பு வரை) ரூ.0.795-வும் செலவு செய்யப்படுகிறது.

சர்க்கரைப் பொங்கல்

அனைத்துப் பயனாளிகளுக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஜூலை 15, அறிஞர் அண்ணா செப்டம்பர் 15, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஜனவரி 17 ஆகியோரின் பிறந்தநாளன்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது. மேற்கூறிய தேதிகளில் வெல்லத்திற்கும், டால்டாவிற்கும் ரூ.0.33 செலவிடப்படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழகம்

கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பெருநகர  சென்னை மாநகராட்சி தன்னாலான முயற்சியை செய்து வருகிறது. செயல் வழிக்கற்றல் முறையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பறை கற்றல் முறை சிறப்படைய தொடக்கப்பள்ளி அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் நாட்டின் சொத்து அவர்கள் மீதான முதலீடு நாட்டின் எதிர்கலத்திற்கான முதலீடு இந்த முயற்சிக்கு UNICEF நிறுவனம் நிதி உதவிகளை செயல் வழிக்கற்றல் முறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பள்ளிகளுக்கு வழங்குகிறது. மாநகராட்சியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
செயல் வழி கற்றல் கற்பித்தல் முறையில் கவனித்தல், நினைவுகூர்தல், புரிந்துக்கொள்ளுதல், திட்டமிடுதல், தகவலைப் பரிமாற்றிக்கொள்ளுதல், கலந்துரையாடுதல், ஒத்துப்போதல், விளையாடுதல், போன்றவை அனைத்துமே இன்பமாக நடைபெறுகிறது. இது ஆசிரியர் மாணவரிடையே நல்றுறவை ஏற்படுத்துகிறது. இது புரிந்து கொண்டு செயலாற்றும் முறையில் உள்ள திட்டம். இதனுடைய முக்கிய நோக்கமானது மாணவரின் உள்ளே மறைந்திருக்கும் திறமை மற்றும் அறிவை மேம்படுத்தி எல்லா நிலையிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும்.

செயல்வழிக் கற்றல் கற்பித்தல் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு


மொழிப் பாடங்களையும் ஏனைய பாடங்களையும் ஏணிப்படி மூலம் கற்றல் ஒரு புதிய முயற்சி, முக்காலத்திலிருந்து கற்றலை எளிமை படுத்துவதற்கு நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பெருநகர  சென்னை மாநகராட்சி கல்வித்துறை மூலம் அனைத்து பாடங்களையும் நன்றாக வடிவமைக்கப்பட்ட அட்டைகள் மூலம் ஏணிப்படி முறையில் முயற்சி UNICEF உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஏணிப்படி முறை தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி அண்மையில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பிற்குத் தயாரிக்கப்பட்டது.
Montessori முறையில் கற்பித்தல் மழலையர் வகுப்பிற்கு என நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 30 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும். உபகரணங்கள் வாங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருநகர  சென்னை மாநகராட்சி யில் 20 வழைலையர் பள்ளிகள் (ஒரு மண்டலத்திற்கு 3 வீதம்) செயல்பட்டு வருகிறது.
முதல்படி
செயல் வழிக் கற்றல் அட்டைகள் மாநில கருத்துறையாளர்கள் மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், DIET மற்றும் DTERT துறையாளர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலைக் கல்வி வகுப்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டது.
இரண்டாம்படி
ஒரு மண்டலத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என பத்து மண்டலத்டகள் மாநில கருத்துறையாளர்கள் மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், னுஐநுகூ மற்றும் னுகூநுசுகூ துறையாளர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலைக் கல்வி வகுப்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டது.
இரண்டாம்படி
ஒரு மண்டலத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என பத்து மண்டலத்திற்கு பத்து மாதிரிப்பள்ளிகளோடு ஏற்கனவே உள்ள மூன்று மாதிரிப் பள்ளிகளையும் சேர்த்து 13 மாதிரிப்பள்ளிகளாக 2003ஆம் ஆண்டு செயல் வழிக் கற்றலில் அப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டலத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் பத்து மண்டலங்களில் 100 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கருத்துறையாளர்களாக நியமித்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
2003-2004ஆம் கல்வி ஆண்டில் இம்முறை அனைத்து பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பள்ளிகளிலும் 1 மற்றும் 2ஆம் வகுப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பெற்றோறிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் இம்முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சென்னை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றன. அவர்களின் 30 ஆயிரம் குழந்தைகள் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளில் உள்ளனர். தற்போது செயல் வழிக் கற்றல் முறை அட்டைகள் UNICEF மற்றும் பெருநகர  சென்னை மாநகராட்சி நிதி உதவியோடு பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளன. 3-மற்றும் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டைகள் தற்போது அச்சிடப்பட்டு வருகிறது.
செயல்வழிக் கற்றல் அட்டைகள் பற்றிய தங்களுடைய மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சென்னை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தங்களுடைய பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கணினி வழிக் கல்வி

பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பள்ளிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட கணினிகளை பெருநகர  சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. சில பள்ளிகளில் L.C.D திரைக் கருவியும் உள்ளது Intel Asia என்ற நிறுவனம் 15 சென்னைப் பள்ளிகளுக்கு "Smart Schools" என்ற திட்டத்தை செயல்படுத்தி கணினி வழிக் கற்றல்-கற்பித்தல் நடைபெற்று வருகிறது.

Teach India எனப்படும் நிறுவனம் 40 பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு 500 இரண்டாம் தர (உபயோகிக்கப்பட்ட) கணினிகளை வழங்கியுள்ளது.

செயல் வழிக் கற்றல் கற்பித்தல்

பெருநகர  சென்னை மாநகராட்சி க் கல்வித்துறையானது பல்வேறு புதுமையான திட்டங்கள் மூலம் தரமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மாணவர் எண்ணிக்கையினை உயர்த்தவும், இடைநிற்றலை குறைக்கவும், மாணவர்களை தக்க வைக்கவும்.
"அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பில் தரமான கல்வியினை வழங்குவது மிக்க சவாலான பணியாக உள்ளது. குழந்தைகள் நாட்டின் சொத்து.
இந்த முறையில் கற்றல், கற்பித்தலை எளிமையாக்குவது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் அர்த்தமுள்ளதாகவும் நடைபெறுகிறது. சொற்களின் சரியான உச்சரிப்புகளைக் கற்றல் மாணவர்களின் சுற்றுப்புற சூழ்நிலையை ஏற்படுத்தப்படுகிறது. கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறனை¢களைச் கொண்டவை. இவையே மிகப்பெரிய நான்கு தூண்களாக இருக்கின்றன. ஒரு தூண் இல்லா விட்டாலும் அது மிகப்பெரிய சேதத்தைக் கற்றல் வடிவத்திற்கு ஏற்படுத்துகின்றது. அதே போன்று இந்த நான்கு திறனில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால் கற்றலில் இவை பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே மிகக் கவனமுடன் இந்தத் திறன்களை கற்கவேண்டும். தனியான படங்கள் ஒவ்வொரு கற்றல் நிகழ்விற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழில் விலங்குகளிதிற்கு ஏற்படுத்துகின்றது. அதே போன்று இந்த நான்கு திறனில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால் கற்றலில் இவை பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே மிகக் கவனமுடன் இந்தத் திறன்களை கற்கவேண்டும். தனியான படங்கள் ஒவ்வொரு கற்றல் நிகழ்விற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழில் விலங்குகளின் பெயர்கள் பறவைகளின் பெயர்கள், கணிதம், வண்டிகளின் பெயர்கள், ஆங்கிலத்தில் பூச்சிகளின் பெயர்கள், சுற்றுச்சூழல் கல்வி போன்ற வடிவில் கற்றல் நிகழ்கிறது. இந்தக் குறியீடுகள் கற்றலின் படிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மைல்கல் பூஜ்யம் மைல்கல் எனப்படுகிறது. இந்த பூஜ்யம் மைல்கல்லானது குழந்தைகள் கற்றலை பெற்றுக்கொள்வதற்கான தயார்நிலையை ஏற்படுத்துகிறது. குறைந்தது பத்து நாட்களில் ஒவ்வொரு மைல்கல்லாக ஒவ்வொரு வகுப்பிற்கும் முடித்துவிடலாம். முதலாம் வகுப்பில் கற்றதை மீள்பார்வை செய்தல் ஆகும்.
கீழ்கண்டபயிற்சிகள் கற்றல் கற்பித்தல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் மேற்கண்ட கற்றல் முறையில் நேர்த்தியான கற்றல் நடப்பதற்காக நிறைய செயல்கள் அறிவுறுத்தப்ப்டுகின்றன. இந்தச் செயல் முறைகள் மிகவும் கவனமாக இந்த வயதுடைய குழந்தைகள் எளிதில் உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவைகள் படிப்படியாக இயற்கையான வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் முறைகள் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களும் மாணவர்களும் இவற்றை எளிதாகவும் நேர்த்தியாகவும் உபயோகிக்க முடிகிறது. அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் வகையில் இந்தச் செயல் முறைகள் உள்ளன. ஒவ்வொரு அட்டையில் உள்ள செயல்களை முடிக்கும் பொழுது அவர்களுக்கு மனநிறைவையும் சாதிக்கும் திறனையும், சந்தோசத்தையும் தருகின்றது. வேகமாகச் கற்கும் குழந்தைகள் வேகமாகக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெதுவாகக் கற்கும் குழந்தைகள் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப எந்தத் தடையும் இன்றி கற்கலாம்.
அவர்கள் படிப்படியாகக் கற்கும் போது என்ன கற்கின்றோம். பின்னர் என்ன கற்கவேண்டும் என்பது தெரிகின்றது. இந்தக் கற்பித்தல்படி ஆசிரியர் எதையும் விட்டு விட முடியாது. கட்டாயமாக அந்தப் படியின்படி செல்ல வேண்டும். நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் குழந்தைகள் கற்பதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கற்றலை கடைசியாக பள்ளியில் எங்கே விட்டார்களோ அங்கேயே தொடரமுடியும் மதிப்பீடு செய்தல் ஒரு தொடர்நிகழ்வு. அவர்கள் எவ்வளவு கற்றனர் என்பதை அறிந்துக்கொள்ள மதிப்பீடு அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படம் வரைந்த மதிப்பீடு அட்டைகள் வழங்குவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் செயல்படுகின்றனர். எனவே மதிப்பீடு செய்தலை ஒரு சுமையாக எண்ணுவதில்லை. ஆனால் அதை ஆர்வமுடைய செயல்பாடகக் கருதுகின்றனர். மதிப்பீடு மேலும் அவ்வப்போது செய்யப்படுகின்றன. ஒரு வருடத்தில் மூன்று முறை தேர்வுகள் நடைபெறுகின்றன.
முத்திரைகள் இரண்டு வகையாகப் பிரிக்க படுகின்றன. அவை பொதுவான முத்திரைகள் மற்றும் குறிப்பிட்ட முத்திரைகள். பொதுவான முத்திரைகள் எல்லாப் பாடங்களுக்கும் பொதுவானவை அவைகள் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை கல்வி ABL முறை கல்வி தனித்தன்மை வாய்ந்ததாகவும், நேர்த்தியாகவும் உள்ளதால் பள்ளி செல்லாத குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவும் AIE மையத்திற்க்குச் செல்லவும் வைக்கின்றது. ABL முறையை நடைமுறைபடுத்தும் ஆசிரியர், ஒவ்வொரு கற்றப் பகுதிக்கும் பயிற்சி முறை மாணவர்களைக் கற்றலுக்கும், மீளக்கற்றலுக்கும், மதிப்பீடு செய்தலுக்கும் தயாராக இருக்க உதவுகின்றது. ABL வகுப்பறை சூழலை பயிற்சியினாலும் அர்த்தமுள்ள கற்றலினாலும் மாற்றிவிட்டது. இந்த முறையானது சிறிய மாற்றங்களுடன் பெருநகர  சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் உள்ள வெற்றியை பார்த்து இது பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு தற்போது நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தலால் 'ஏன் குழந்தைகள் மிக குறைவான கல்வி நிலையில் உள்ளனர்' எனக்கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக்குழு உறுப்பினர்கள் தொடக்கக்கல்வியில் அதிகமான வெளிப்பாடு இருந்ததால் அவர்கள் மாணவர்கள் மீதும், பெற்றோர்களின் மீதும் ஆசிரியர்கள் மீதும், அரசு மீதும் இவர்கள் மாணவர்களின் குறைவான கற்றலுக்குக் காரணம் அல்ல என அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். பிறகு கூர்ந்து கவனிக்கப்பட்டு இந்தக் குழு மாநகராட்சிப் பகுதியில் கீழ்காணும் பழைய முறையில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்தது.

  • ஆசிரியர் எப்பொழுதும் வகுப்பறையை ஆதிக்கம் செய்கின்றனர்.
  • எப்பொழுதாவது கற்றல், கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் விரிவுரை முறையே கடைபிடிக்கப்படுகிறது.
  • திரும்பத்திரும்ப சொல்லி மனதில் வைக்கும் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • ஆசிரியர் தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் எனவும், மாணவ்£களுக்கு ஒன்றுமே தெரியாது எனவும் நினைக்கின்றார்.
  • மாணவர்கள் அனைவரும் ஒரே வேகத்திலும் ஒரே தரத்திலும் கற்கிறார்கள் என ஆசிரியர் நினைக்கின்றார்.
  • ஆசிரியர்கள், மாணவர்களிடையே இடைவெளி அதிகம்
  • கற்றலைவிட கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
  • குழந்தைகள் பள்ளிக்கு வரதவறிய நாட்களில் கற்க வேண்டிய பகுதிகளை கற்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.
  • பண்முக அளவு, பண்முகதரம் பற்றி கூறப்படவில்லை.
  • பழமையான மதிப்பீடே உள்ளது.
  • மகிழ்ச்சியான இதரவகை கற்றல் இல்லை
  • விளையாட்டு முறையில் கற்றலும், பயிற்சி செய்தலும் இல்லை
  • மனமொத்த சுயகற்றலுக்கு சந்தர்ப்பம் குறைவு
  • பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் முடிக்கின்றனர். மாணவர்கள் முடிப்பதில்லை
  • கற்பித்தலுக்கு வகுப்பறையில் குறைந்த அளவே வசதிகள் உள்ளன.
  • கற்பித்தல் உபகரணங்கள் கவர்ச்சிகரமானதகவும, உள்ளார்ந்த பயிற்சியும் இல்லை.
  • சுதந்தரமான கற்றல் இல்லை. எல்லா நேரங்களும் வரையறை படுத்தப்பட்ட சூழ்நிலையிலேயே கற்பிக்கப்படுகிறது.

இந்த மேலே கூறிய குறைபாடுகளை நீக்குவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் ABL அதை சென்னை பள்ளிகள் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்த இருக்கிறது.

ABL திட்டத்தை நடைமுறைபடுத்துதல் 4 வகைபடும்.

1. தயார் நிலைக் தகுதிபடுத்துவது (ஆயத்தப்படுத்துதல்)
2. சோதனை செய்தல்
3. விரிவு படுத்துதல்
4. மதிப்பிடுதல்

  • ஆயத்தப்படுத்தலின் போது முக்கியமான 4 குழு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 26 பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் ரிஷிவேலி திட்ட்த்தில் 3 அல்லது 4 முறை மீண்டும் 2003-2004-ல் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இந்த ABL அணுகுமுறை ஒரு வருடம் தேர்ந்தªடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் 10 மண்டலங்களில் சோதனை முறையில் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் 1 மற்றும் 2ம் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் நோக்கமோ IV வகுப்புவரை ஒருங்கிணைப்பதே இந்த முடிவுடன் சிறப்பாக இருந்ததால் இந்த அணுகுமுறை மாநகராட்சி பள்ளிகளில் 2004-ல் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில் கற்றல் அட்டைகள் வகுப்பு 1 & 2 (4 பாடங்கள்) மற்றும் ஆசிரியர் வழிகாட்டுதல் அச்சடித்து வெளியிடப்பட்டது.

  • 2005-ஆம் ஆண்டு 3 வகுப்பு 1 & 2-ம் வகுப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. 2004-2005ஆம் ஆண்டில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான நான்கு பாடப் பிரிவுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் தயாரித்து அச்சடித்து, விநியோகப்படுத்தப்பட்டது.
   
   

 

வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்:

  • 2003-2004ஆம் ஆண்டில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பரிசோதனைக்குட்படுத்தி, அவர்களுக்குச் செயல் வழிக் கற்றலில் முதன்மை பயிற்சி வழங்குவதோடு மட்டும் அல்லாமல், தொடர்ச்சியாக அந்த ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • செயல்வழிக் கற்றல் திட்டத்தை சமூகமாக நடத்திச் செல்ல ஆசிரியர்களுக்கான தரம் உயர்த்துதல் மற்றும் திரும்புதல் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
  • வனங்களை அதிகரிக்கவும் துணைபுரியவும், ஒவ்வொரு மண்டலம்/ப்ளாக்கிலிருந்தும் 10 பேர்கள் விகிதம் 100 பேர்கள் கொண்ட ஒரு குழுவிற்குப் போதுமான அளவு செயல்வழிக் கற்றலில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்றவர்களே ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், நான்காம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தார்கள்.
  • செயல் வழிக்கற்றலைச் சிறந்த முறையில் கண்காணித்து செயல்படுத்த எல்லா ப்ளாக் ரிஸோர்ஸ் டீச்சர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஏ.டி.பி.ஸிக்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் பல்வேறு சுழற்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் மாதிரி பள்ளிகளுக்குச் சென்று, வெற்றிக்கான மற்றும் புகழத்தக்க செயல்களைப் பற்றி கேட்டறிந்து, அவர்களுடன் உரையாடி பயிற்சி பெற்றார்கள்.
  • இதை தவிர, அதே தருணத்தில் ஆசிரியர்களுக்கு உதவுவதற்காக வல்லுநர் குழு மூலமாக தொடர்ந்து உதவி வழங்கப்பட்டு வந்தது.
  • எல்லா நேரமும் ஆசிரியர்களுக்கு உதவுவதற்காகவே பயிற்சி மையம் ஒன்று, இரங்கநாதன் தெரு, நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டது.

செயல்வழிக்கற்றலின் வழிமுறைகள்:-

  • தனித் திறன்கள் தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவைகளை வெவ்வேறு செயல்பாடுகளாக மாற்றப்பட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு பகுதி அல்லது அலகு மைல்கல் என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தகுந்த மைல்கற்களை சேர்த்து ஒரு வளையம் போல பின்னி இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்ட மைல்கற்கள் "லேடர்" என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மைல்கல்லை அடையும் முறையில் வெவ்வேறு படிக்கட்டுகள் உள்ளன. பயிலும் முறையில் வெவ்வேறு படிக்கட்டுகள் உள்ளன. பயிலும் முறையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டும் "லோகோ" என அழைக்கப்படுகிறது.
  • மைல்கற்கள் மற்றும் அதில் உள்ள செயல்பாடுகளும், சுலபமான செயல்பாடுகளிலிருந்து கடினமான செயல்பாடுகள் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களைக் குழுடுகள் உள்ளன. பயிலும் முறையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டும் "லோகோ" என அழைக்கப்படுகிறது.
  • மைல்கற்கள் மற்றும் அதில் உள்ள செயல்பாடுகளும், சுலபமான செயல்பாடுகளிலிருந்து கடினமான செயல்பாடுகள் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களைக் குழுக்களாக சேர்க்கக் குழு அட்டைகள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இந்த முறையிலேயே மதிப்பீடு உள்ளடங்கி இருக்கிறது. இதற்காகத்தனி கார்டுகள் அல்லது செயல்பாடுகள் உபயோகப் படுத்தப்படும்.
  • மேலும் வலுவூட்டுவதற்காக, ஒவ்வொரு குழுந்தைகக்கும் பயிற்சி புத்தகங்கள் அல்லது பயிற்சி ஏடுகள் மூலமாக செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளின் வளர்ச்சி ஆண்டு மதிப்பீடு அட்டை மூலமாக பதிவு செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு மைல்கல்லுக்கும், அறிமுகம் வலுவூட்டுதல், பயிற்சி மதிப்பீடு, திருப்புதல், குறைதீர் கற்றல் ஆகிய செயல்பாடுகள் 'லாகோ' -கல் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

செயல்வழிக்கற்றலின் பயன்கள்:-

  • குழந்தைகள் அவரவர் வழியிலே பயில்கிறார்கள்
  • தானே கற்றலில் அவர்களுக்குக் கால அவகாசம் அதிகமாகச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழி கற்றல் குறைக்கப்பட்டுள்ளது.
  • இது குழுவின் மூலம் கற்றல், ஒருவருக்கொருவர் புரிந்து கற்றல் மற்றும் தானே கற்றலை மேம்படுத்துகிறது.
  • ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தை மாணவர்களுக்குள்ளேயே நேரத்தியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைபட்டால் மட்டும் குழுந்தைகளின் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.
  • இம்முறை கற்றலின் வழியில் குழந்தைகள் பங்கேற்பை ஒவ்வொரு படிக்கட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
  • இம்முறையில் குழந்தைகளே அறிய முடியாத அளவில் மதிப்பீடு அமைக்கப்பட்டிருக்கிறது.
  • மனப்பாடம் அல்லது உருப்போட்டு படித்தலுக்கான வழியே இதில் இல்லை
  • இம்முறையில் பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவார்கள்.
  • வகுப்பறை நடைமுறைகள் குழந்தைகளின் தேவைகள் மற்றும் ஆர்வத்தையொட்டி இருக்கும்.
  • குழந்தை பயிலுவதிலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும்.
  • இம்முறை கற்றலில் பலகிரேட் மற்றும் பலமட்டங்கள் சிறந்து பயன்படுத்தப்படுகிறது.
  • எந்த ஒரு குழந்தையும் நேரடியாக, மேலே செல்ல முடியாது மைல்கல்லில் உள்ள ஒவ்வொரு படிகட்டையும் ஏறித்தான் செல்ல முடியும்.
  • தான் மைல்கல்லை அடைந்து விட்டோம் என்ற உணர்வு குழந்தைக்கு நம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்துகிறது.
  • கண்கவர் அட்டைகளும், செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
  • குழந்தையின் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் தகவல் பறிமாற்றத் திறன்கள் வளர்ச்சி அடைய வழிவகுக்கிறது.
  • குழந்தைகள் குழுவில் இருக்கும் பொழுது ஒருவித பாதுகாப்பை உணர்வார்கள்.
  • குழந்தைகள் ஒரே இடத்தில் இல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே நகர்ந்து செயல்பாட்டை முடிக்கலாம்.
  • மேலும் மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படுகிறது. ஆசிரியர் ஒரு உதவியாளராகத் திகழ்கிறார்.

செயல்வழிக் கற்றல் 6000 AIE மையங்களைத் தவிர மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கமான பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. செயல்வழிக் கற்றலில் உள்ள பொருத்தமான அட்டைகள், ப்ளாக் ரிஸோர்ஸ் மையங்களில் நிரந்தரமாக கிடைக்கப்பெற்றுள்ளன. நெகிழவைக்கும் இந்த வழியை சில பள்ளிகளில் (ஒரு ப்ளாக்கில் 10 பள்ளிகள் வீதம்) பரிசோதனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு செயல்வழிக் கற்றல் மாடல்களையும், தானே கற்றல் பொருட்களையும் பள்ளிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த நிரிஸோர்ஸ் மையங்களில் நிரந்தரமாக கிடைக்கப்பெற்றுள்ளன. நெகிழவைக்கும் இந்த வழியை சில பள்ளிகளில் (ஒரு ப்ளாக்கில் 10 பள்ளிகள் வீதம்) பரிசோதனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு செயல்வழிக் கற்றல் மாடல்களையும், தானே கற்றல் பொருட்களையும் பள்ளிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை செயல்படுத்த ஆசிரியர் கல்வி இயக்குநரகமும், தொடக்கக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரகமும் முனைந்து அதற்காகப் பயிற்சி அளித்துச் செயல் படுத்தப்படுகிறது. புதுமையான கல்வி இயக்கத்தில் மேலும் ஒரு மௌனப் புரட்சி இது!
   நான் கேட்டேன், மறந்தேன்,
   நான் பார்த்தேன், நினைவில் கொண்டேன்,
   நான் செய்தேன், புரிந்து கொண்டேன்.


உடல்நலம் மற்றும் நலம் பேணுதல்

அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையான உடல்நலம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெருநகர  சென்னை மாநகராட்சி யில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

   

பெண்களுக்கான நாப்கின்கள் வழங்கப்படுகிறன்றன. நாப்கின்களை அழிப்பதற்கான கருவிகளும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும் நாள் அனைத்து சென்னை பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. காலை இறைவணக்கத்தின் போது சுகாதார பழக்கங்கள் பற்றி சிறு வாசகங்களை மாணவர்கள் கூறி வருகிறார்கள்.

டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது (2011)

    கீழே குறிப்பிபிப்பட்டுள்ள 9 ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் தமிழக அரசால் வழங்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை 2011ல் பெற்றனர்.

வ.எண் ஆசிரியர் பெயர் பதவி பள்ளி
1 கே. ஜீவரத்தினம் தலைமை ஆசிரியை செ.தொ.பள்ளி,ஜோன்ஸ் சாலை
2 ஜி. சத்தியவதி இடைநிலை ஆசிரியை செ.ந.நி.பள்ளி,சேத்துப்பட்டு
3 ஈடித் பியூலா தலைமை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
அயனாவரம்
4 ஐ. விஜியலட்சுமி தலைமை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
அன்னா பிள்ளைதெரு
5 எல்.பாத்திமா மேரி தலைமை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
ஏழுகிணறு சாலை
6 எம். சாந்தி தலைமை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
சென்னை-81
7 டி. எலிசபெத் விஜய ராணி தலைமை ஆசிரியை செ.மே.நி.பள்ளி
சூளைமேடு
8 டி.எஸ். மகாலட்சுமி முதுகலை பட்டதாரி ஆசிரியர் செ.மே.நி.பள்ளி
இராட்லர் தெரு
9 ஜி. தங்கராஜ் பட்டதாரி ஆசிரியர் செ.மே.நி.பள்ளி
நுங்கம்பாக்கம்

2012-ல் மேற்படி விருது பெற்றவர்கள்

வ.எண் ஆசிரியர் பெயர் பதவி பள்ளி
1 ஆர். அமிர்த மேரி பாத்திமா தலைமை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
எழும்பூர்
2 ஆர். விஸ்வநாதன் தலைமை ஆசிரியர் செ.ந.நி.பள்ளி
வில்லிவாக்கம்
3 எஸ். ஜெயந்தி இடைநிலை ஆசிரியை செ.ந.நி.பள்ளி
பேகம் தெரு

பெற்றோர் - ஆசிரியர்:-

பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் தரமான கல்வியை சென்னைப் பள்ளிகளில் தர உதவியாக உள்ளது. இச்சங்கம் நேரடியாக அனைத்து வகையான செயல்பாடுகளையும் தருவதில் சென்னைப் பள்ளிகளுக்கு உதவியாக உள்ளது. சென்னைப் பள்ளிகளில் வசூலிக்கும் தொகைக்கு ஈடான பங்களிப்பை மாநகராட்சி நிர்வாகம் சங்கத்திற்கு அளிக்கிறது.


சிறப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்:-

 தேவையான பயிற்சிகளும், வேலை செய்யும் திறனிற்கான பயிற்சியும் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்படுகிறது. ஆங்கிலமொழி பயிற்சி, ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி, திறமையான ஓவியத்தை வளர செய்ய பயிற்சி, ஓவியப் பயிற்சி, கணித பயிற்சி பங்கு சந்தையை பற்றி தெரிந்து கொள்ள பயிற்சி. இப்படி பல்வகை பயிற்சிகள் தரப்படுகின்றன.

   
   

மாணவர்களை ஒவ்வொரு வாரமும் பல்வேறு இடங்களுக்கு வெவ்வேறு பள்ளிகளிலிருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
செவ்வாய் - தட்சண் சித்ரா (8 மற்றும் 9 வகுப்புகளைச் சார்ந்த 60 மாணவர்கள்)
வியாழன் - 60 மாணவர்கள் (ஒன்பதாம் வகுப்பு) அருங்காட்சியகம்
வெள்ளி - அறிவியல் நகரம் (8 மற்றும் 9 வகுப்புகளைச் சார்ந்த 60 மாணவர்கள்)


கணித ஆய்வு கூடம் :

நன்றாக ஆய்வு செய்யப்பட்ட கணித ஆய்வுக் கூடம் இரண்டு சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படுகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள பள்ளியிலும் ,சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இயங்குகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் ஐந்து உயர்நிலை பள்ளிகளில் விரிவு படுத்தப்படஉள்ளது. வி.பி.கோயில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் கணித ஆய்வு கூடம் முன்னரே நிறுவப்பட்டுள்ளது. இதே மாதிரியான கணித ஆய்வுக் கூடம் மேலும் ஐந்து உயர்நிலைப் பள்ளிகளில் இவ்வருடம் நிறுவப்பட உள்ளது.
AIF (America India Foundation) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் 25 சென்னை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளின் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொழில் நுட்ப அடிப்படையில் கற்பிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

VSET நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நற்பண்பு கல்வி 55 பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

சென்னை பங்கு சந்தை நிறுவனத்துடன் இணைந்து 7 மேனிலைப் பள்ளிகளுக்கு பங்கு மற்றும் சந்தை தொடர்பான பயிற்சியும், வங்கி தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

Toyota India நிறுவனத்துடன் இணைந்து 8 பள்ளிகளை சார்ந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.