முகப்பு>>   சென்னைமாநகராட்சியைப்பற்றி

பெருநகர  சென்னை மாநகராட்சி யைப்பற்றி

                                    1)  மாமன்றம்
                                    2)  மேயர்
                                    3)  நிலைக் குழுக்கள்
                                    4)  வார்டு குழுக்கள்
                                    5)  ஆணையர்
ஆகியோரை உள்ளடக்கிய அமைப்பாகச் செயல்படுகிறது.  மேலும் ஆறு நிலைக்குழுக்களுடன் ஒவ்வொரு மண்டலத்திற்கும் என வார்டு குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

(1).வரிவிதிப்பது மற்றும் நிதி (2) பணிகள் (3) நகரமைப்பு (4) சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (5) கணக்குகள் மற்றும் தணிக்கை (6) கல்வி என ஆறு நிலைக் குழுக்கள் உள்ளன.  மேலும் 15 மண்டல வார்டு குழுத் தலைவர்களையும் உள்ளடக்கியதாகச் செயல்படுகிறது.  ஒவ்வொரு நிலைக் குழுவிலும், மேயர் இருந்து அவரே அக்குழுவின் தலைவராக இருந்து செயல்படுவார்.

வணிக அறிவுரைக் குழு

      முக்கியமான சிக்கல்கள் எழும்போது பேரவையானது, பணி அறிவுரைக் குழுவை அமைக்கும்.  மேயரே இதன் தலைவராகவும் செயல்படுவார்.  தலைவர் விரும்பும் போது இக்குழு கூடி முடிவு எடுக்கும்.

மாமன்றக் கூட்டம்

     ஒவ்வொரு மாதத்திற்கும் மேயர் குறிப்பிடும் நாளில் ஒரு முறையேனும் பேரவைக் கூட்டம் (மாமன்றக் கூட்டம்) கூட்டப்படுகிறது.

பெருநகர  சென்னை மாநகராட்சி

       புதுப்பொலிவு

“குடி உயரக் கோல் உயரும்

  கோல் உயரக் கோன் உயர்வான்”

     எனும் வாக்கை ஆதாரமாகக் கொண்டு குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அனைத்து வழிகளிலும் வளர்ச்சிப் பணிகளைப் படிப்படியாக ஆற்றி பொலிவுடன் வளர்ந்து வருகிறது பெருநகர  சென்னை மாநகராட்சி .